பாஜக எதிராக ஐடி ஊழியர்கள் வாக்குகளை கவர சித்தராமையா எடுத்த அடுத்த ஆயுதம் எச்-1பி விசா!

பெங்களூரு: கர்நாடக தேர்தல் வருகின்ற மே 12-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் இடையில் பெறும் போட்டி நிலவி வருகிறது. இன்னிலையில் எச்-1பி விசா பயன்படுத்தும் டெக் ஊழியர்களின் மனைவிகளுக்கு அமெரிக்கா வருவதற்கு எதிராக டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாஜக அரசு என்ன செய்ய பொகிறது என்ற தோணியில் டிவிட் போட்டுள்ளார்.

சித்தராமையா டிவிட் - 1

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் டிவிட்டர் பதிவில் " அமெரிக்க அதிபட் டொனால்டு டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கையினால் கர்நாடக ஐடி ஊழியர்கள் பெறும் அளவில் பாதிக்கப்படுவார்கள். டிரம்ப் அரசு எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்கா செல்லும் ஊழியர்களின் மனைவிகளை அழைத்துச் செல்ல முடியாத அளவிற்கு சட்டங்களை நெறுக்கிவிடும் போல் இருக்கிறது. ஏன் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க ஊழியர்களின் மனைவிகளை இந்தியா அழைத்து வர அனுமதி வழங்கப்படுகிறது" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களையும் டேக் செய்துள்ளார்.

சித்தராமையா டிவிட் - 2

மேலும் மற்றொரு டிவிட்டில் "அமெரிக்க நிர்வாகத்திடம் எச்-1பி விசாவின் தேவை & திரும்பப் பெறுதல் குறித்து பலமாக எடுத்துக்கூறுங்கள்" என்றும் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை டேக் செய்து கர்நாடக முதல்வர் சித்தராமையா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரு

பெங்களூரு

இந்திய அளவில் கடந்த 25 வருடங்களாக பெங்களூருவில் அதிகப்படியான ஐடி ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது, டிரம்ப் எடுக்கும் நடவடிக்கையினால் இந்த ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதை சித்தராமையா வேட்டுக்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

கர்நாடகாவில் வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலின் போது 53 லட்சத்திற்கும் அதிகமாக புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்தியாவின் சிலிக்கான் நகரமான பெங்களூருவில் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் உள்ளனர்.

அமெரிக்காவின் எச்-4 விசா திறம்பப் பெறும் திட்டம்

அமெரிக்காவின் எச்-4 விசா திறம்பப் பெறும் திட்டம்

டிரம்ப் அரசு எச்-4 விசா கொள்கையினை திரும்பப்பெற்றால் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்க செல்லும் ஐடி ஊழியர்களால் தங்களது மனைவியை அங்கு அழைத்துச் செல்ல முடியாது. ஒபாமா ஆட்சிக் காலம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எச்-4 விசா முறையினை டிரம்ப் அரசு திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இதனால் எச்-4 விசா பயன்படுத்தி வருபவர்களால் பறிபோகும் அமெரிக்க வேலை வாய்ப்புகள் மீட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு எவ்வளவு நபர்கள் எச்-4 விசா மூலம் சென்றுள்ளனர்?

அமெரிக்காவிற்கு எவ்வளவு நபர்கள் எச்-4 விசா மூலம் சென்றுள்ளனர்?

எச்-4 விசா முறையினை டிரம்ப் அரசு திரும்பப் பெற உள்ள நிலையில் 1,00,000 இந்தியர்கள் எச்-4 விசா மூலம் அமெரிக்க சென்றுள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+