ஒரு நாட்டினுடைய தலையெழுத்தை மாற்றி எழுத சில நூறாண்டுகள் தேவைப்படலாம் அல்லது சில பத்தாண்டுகளில் கூட அப்பணியை நிறைவு செய்யலாம். தற்போது ஏழை நாடாகவும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளாகவும் உள்ளவைகள் எல்லாம் ஒரு காலத்தில் புகழ்மிக்க வரலாற்றையும் செல்வச் செழிப்பு மிக்க வளத்தினையும் கொண்ட நாடுகளாக இருந்துள்ளன.
ஒரு 500 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால் இன்றைக்கு வளமிழந்துள்ள 5 நாடுகள் வளமிக்க நாடுகளாகத் திகழ்ந்த வரலாற்றை அறியலாம். ஒரு நாட்டின் தற்போதைய நிலையும் கடந்த நூற்றாண்டுகளில் அது பெற்றிருந்த நிலையும் தற்போதை தல வருமானத்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையின் அடிப்படையில் ஆராயப்படவில்லை. ஒரு நாட்டின் தல வருமானம் என்பது அந்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனின் சராசரியான ஆண்டு வருமானத்தைக் குறிக்கும்.
இந்தியாவின் வருமானம்
2017 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் தலவருமானம் 4.7 இலட்சமாகும் ( 7200 டாலர்கள்). அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானதாகும். அமெரிக்காவின் தல வருமானம் 39.4 இலட்சமாகும் (59,500 டாலர்கள்).
இந்திய பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 10ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவில் வசிக்கின்ற பெரும்பாலான மக்கள் வறுமை நிலையில்தான் உள்ளனர். தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டுவதற்கே மிகவும் சிரமப்படுகின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இது போன்ற வறுமைநிலை இல்லை. முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியக் குடும்பங்கள் செல்வவளம் மிக்கவர்களாகத் திகழ்ந்திருந்தன.
மேம்பட்ட நிலை
இந்தக் காலத்தில்தான் மிகுந்த பொருட்செலவில் புகழ்மிக்கப் பல நினைவுச் சின்னங்கள் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டன. அப்போது இந்தியா ஒரு முன்னணி உற்பத்தி நாடாகவும், வாழ்க்கைத்தரம் மற்றும் வேலைக்கான ஊதியம் ஆகியவற்றில் இங்கிலாந்து நாட்டைவிடச் சற்று மேம்பட்ட நிலையிலும் இருந்தது. அன்றைய நிலையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் இங்கிலாந்து முன்னணி நாடாகத் திகழ்ந்தது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
முகலாயர் காலத்து இந்தியா
முகலாயர் காலத்து இந்தியாவின் பொருளாதார நிலை சீனாவின் பொருளாதாரத்தை விட முன்னேறிய நிலையில் இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் உலகத்தின் மொத்த உற்பத்தியில் (Global GDP) இந்தியாவின் பங்கு 25 சதவிகிதமாக இருந்தது. இன்றைய நிலையில் அந்த உற்பத்தியின் மதிப்பு 21 டிரில்லியன் டாலர்களுக்குச் சமம் என்பது இந்தியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய செய்தியாகும். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி அதிகாரச் சண்டையால் இந்தியா இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. அதன் காரணமாக இந்தியா தன்னுடைய பலத்தையும் பொருளாதரா வளத்தையும் இழந்தது.
மாலி
உலகின் வளர்ச்சியடையாத நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று மாலி. வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்நாட்டின் தற்போதைய தலவருமானம் 1.4 இலட்சமாகும் (2,200 டாலர்கள்). பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்கா கண்டத்தில் மிகவும் செல்வவளம் மிக்கப் பேரரசுகளுள் ஒன்றாகத் திகழ்ந்திருந்தது இந்நாடு. உலகத்தில் உள்ள தங்கத்தில் ஏறக்குறைய சரிபாதி அளவை இந்நாடு தன்வசம் வைத்திருந்தது. எகிப்து, பெர்சியா, வெனிஸ், ஜெனோயா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பில் இந்நாடு சிறந்து விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இந்நாட்டை ஆட்சிபுரிந்த பேரரசு வீழ்ச்சியுற்றது. இந்நாட்டின் புகழும் செல்வ வளமும் சேர்ந்து வீழ்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இந்நாட்டால் மீண்டு வர இயலவில்லை. இன்று வறுமையோடு போராடிக் கொண்டிருக்கும் இந்நாட்டு மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
கியூபா
கியூபா நாட்டில் புரட்சி ஏற்பட்ட காலத்தில் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளுள் அதிக அளவிலான உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட வளமான நாடாகத் திகழ்ந்திருந்தது. இன்றைய நிலையில் கியூபா அரசாங்கம், தன்னுடைய குடிமக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி மற்றும் குடியிருப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்குக் கூடப் போராடிக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தடை மற்றும் முதலாளித்துவப் போக்கிற்கு மசியாமல் மக்கள் நலன் நாடும் கம்யூனிச அரசாங்கத்தின் நீட்சி ஆகியவற்றின் காரணமாக இந்நாட்டின் செல்வ வளம் வீழ்ச்சியடைந்து வருகிறது. 1990 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து கியூபா நாட்டால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. தற்போது இந்நாட்டின் தல வருமானம் 7.8 இலட்சமாகும் (11,900 டாலர்கள்).
தாய்லாந்து
தாய்லாந்து நாட்டின் தல வருமானம் 17,800 டாலர்கள். உண்மையில் இந்நாட்டின் தல வருமானம் இந்நாட்டை ஏழை நாடுகளின் பட்டியலில் சோ்க்கும் அளவுக்குக் குறைவாக இல்லை. ஆனால் இந்நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளன. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்நாடு அயுத்தயா (Ayutthaya) பேரரசின் கீழ் இருந்தது. அப்போது இந்நாடு சர்வதேச வணிகத்தின் மையமாகவும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் செல்வ வளம் படைத்த நாடாகவும் விளங்கியது. தற்போதைய தாய்லாந்தின் பெரும்பகுதி இந்தப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தப் பேரரசின் தலைநகரம் பாரிசுக்குப் பகை நகரமாக விளங்கியது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பேரரசின் சாம்ராஜ்யத்தில் வாரிசுச் சண்டைகள் தலைதூக்கின. வாரிசுச் சண்டையின் காரணமாகப் பலவீனமடைந்த இப்பேரரசை வீழ்த்த பர்மிய இராணுவம் படையெடுத்து வந்தது. வலிமை வாய்ந்த அயுத்தயா பேரரசு வீழ்த்தப்பட்டு வலிமையற்ற தொன்புரி (Thonburi) அரசு பொறுப்புக்கு வந்தது.
ஈராக்
1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக ஈராக் விளங்கியது. மிகப்பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட இந்நாடு, அப்போதைய பெட்ரொல் விலை உயர்வால் பொருளாதார ரீதியாக மிகப்பெரும் அளவில் பயனடைந்தது. இக்காலத்தில் இந்நாட்டின் மொத்த உற்பத்தி ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் வகையில் மிக வேகமாக முன்னேறியது. இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி அடிப்படைக் கட்டமைப்புகள், சுகாதரா நலம், சமூகநலம் ஆகிய துறைகளில் இந்நாடு முன்னேறியது.
சதாம் ஹீசைன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நிலைமை மாறியது. இவருடைய சர்வாதிகாரத் தலைமையால், பக்கத்து நாடான ஈரானுடன் 8 ஆண்டுகளுக்கும் மேலாகப் போரிட வேண்டிய நிலைமை ஈராக் நாட்டிற்கு ஏற்பட்டது. இந்த நீண்ட போர் ஈராக் நாட்டின் பொருளாதார அழிவுக்குக் காரணமாய் அமைந்தது. 2003 முதல் 2011 வரை நடைபெற்ற சண்டையால் ஈராக்கின் பொருளாதராம் மீண்டும் சரிவைச் சந்தித்தது. இந்நாட்டுப் பொருளாதாரம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்நாட்டின் தல வருமானம் தற்போது 11.2 இலட்சமாக உள்ளது (17,000 டாலர்கள்). இருந்தாலும் முந்தைய பொருளாதார வளர்ச்சி நிலையை எட்டிப்பிடிக்க இன்னும் நீண்ட காலம் ஆகலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications