இந்தியாவின் 3வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் விப்ரோ பல ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக ஆரம்பகட்ட ஊழியர்கள் அதாவது பிரஷ்ஷர்களுக்கான சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பிற முன்னணி நிறுவனங்களும் பிரஷ்ஷர்களின் சம்பளத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி ஊழியர்கள்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்களைப் பிடிக்கக் குழாயடி சண்டை போட்டாலும் கல்லூரியில் இருந்து புதிதாக நிறுவனத்தில் சேரும் ஊழியர்களின் சம்பளத்தைக் கடந்த 10 வருடமாக எவ்விதமான மாற்றும் செய்யக்கூடாது என ஒற்றுமையாக இருக்கிறது.
சம்பளம்
இதன் பிடி கடந்த 10 வருடத்தில் பிரஷ்ஷர்களின் சம்பளம் 3-4லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கத்தை முதல் முறையாக விப்ரோ மாற்ற முடிவு செய்துள்ளசது.
டிஜிட்டல் தொழில்நுட்பம்
விப்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி டிஜிட்டல் தொழில்நுட்பம் தெரிந்துள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிறுவன பணியில் அதிகளவில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் தற்போது பிரஷ்ஷர்களின் சம்பளத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.
புதிய சம்பளம்
இந்நிலையில் இயல்பான கல்லூரியில் இருந்து வருபவர்களுக்கு 3.5 லட்சம் ரூபாய் வரையிலும், நடுத்தரக் கல்லூரியில் இருந்து வருபவர்களுக்கு 6-6.5 லட்சம் வரையிலான சம்பளத்தை அளிக்கவும், பிரீமியம் கல்லூரியில் இருந்து வருபவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் அளிக்கவும் விப்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications