இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்தாலும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வந்த பின்பு புதிய வேலைவாய்ப்புகள் மட்டும் அல்லாமல் பல ஆயிரம் வேலைவாய்ப்புகளைக் காணாமல் போய் வருகிறது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் இதேபோல் தொடர்ந்தால் அடுத்தச் சில வருடத்தில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.
என்ன தீர்வு..
இந்தியாவைப் போலவே வாழ்வாதாரம் கொண்டு நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்த உலக வங்கி, நாட்டின் வேலைவாய்ப்பு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றால் அடுத்த 20 வருடத்திற்குச் சராசரியாக 18 சதவீத வேலைவாய்ப்பு அளவீட்டை நிலைநிறுத்த இந்திய பொருளாதாரம் நிலையாக ஒவ்வொரு வருடமும் 12 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைய வேண்டும் என உலக வங்கியின் ஆய்வுகள் கூறுகிறது.
பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் தற்போது 7-8 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இது உலகின் முன்னணி நாடுகளை விடவும் அதிகமாக இருந்தாலும், இந்தியாவில் பணியாற்றும் வயதில் இருக்கும் மக்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு கொடுக்க முடியாத நிலையிலேயே இந்திய அரசு உள்ளது.
வளர்ச்சி
இந்தியாவின் வேலைவாய்ப்பு பிரச்சனைகளைத் தீர்க்க நிலையாக 12 சதவீதம் வளர்ச்சி அளவை அடைய வேண்டும் என்பது தற்போதைய நிலைக்கு முற்றிலும் நடக்காத காரியம் என்ற சொல்ல முடிகிறது.
உற்பத்தி
இந்த நிலையை மாற்ற இந்திய அரசு உற்பத்தித் துறையில் கவனத்தைச் செலுத்துவதை விடச் சேவை மற்றும் கட்டுமான துறையில் கவனத்தைத் திருப்பினால் கண்டிப்பாக வேலைவாய்ப்பு பிரச்சனையைப் பெரிய அளவில் குறைக்க முடியும்.
கட்டுமான துறையில் வேலைவாய்ப்பு நெகிழ்வுதன்மை 1 சதவீதம் என்றால் உற்பத்தித் துறையில் வெறும் 0.34 சதவீதம்.
சேவைத் துறை
அதேபோல் சேவை துறைக்குச் சிறந்த உதாரணம், 2015ஆம் ஆண்டில் வெறும் 3,00,000 பேர் பணியாற்றிய ஓலா, உபர் நிறுவனங்களில் 2018இல் இதன் எண்ணிக்கை 10,00,000 வரையில் உயரும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதேப்போன்று இந்திய அரசு சேவைத்துறையில் கவனத்தைச் செலுத்தினால் பெரிய அளவிலான வெற்றியை அடையலாம்.
உற்பத்தித் துறை அவசியம்
அதேபோல் உற்பத்தித் துறையும் இந்திய பொருளாதார வளர்ச்சி மிக அவசியம் என்றாலும், வேலைவாய்ப்பு பிரச்சனையைக் குறைந்த காலகட்டத்தில் தீர்க்கச் சேவை துறை மற்றும் கட்டுமான துறை சரியான தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications