அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமேசானுக்கு எதிராகச் செய்த டிவீட்டின் எதிரொலியாக இந்நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவிலான சரிவு ஏற்பட்டது.
இது மட்டும் அல்லாமல் டிரம்பின் டிவீட் அனைத்தும் ஜெப் பீசோஸ் மற்றும் அமேசான் நிறுவனம் அரசை முறையற்ற வகையில் பயன்படுத்துவதாக இருந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதிரடி மாற்றம்
இந்நிலையில் தான் அமேசான் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. வால் ஸ்ட்ரீட் கணிப்புகளை விட அனைத்துப் பிரிவிலும் அதிகளவிலான அளவை அடைந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 7 சதவீதம் வரையில் உயர்ந்து அசத்தியது.
டிரம்ப் டிவீட்டால் மோசமான நிலையில் இருந்த அமேசான் காலாண்டு முடிவுகள் மூலம் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்தது.
காலாண்டு முடிவுகள்
2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமேசான் தனது உலகளாவிய வர்த்தகத்தின் வாயிலாக 51.04 பில்லியன் டாலர் வருமானத்தையும், ஒரு பங்கிற்கு 3.27 டாலர் லாபத்தையும், அமேசான் வெப் சர்வீசஸ் வாயிாக 5.44 பில்லியன் டாலர் வருவாயும் பெற்று அசத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் சமீபத்தில் அமேசான் வாங்கிய ஹோல்புட்ஸ் நிறுவனத்தின் விற்பனை அளவு கடந்த விடச் சுமார் 43 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளது.
12 பில்லியன் டாலர்
இதன் வாயிலாக நியூயார்க் பங்குச்சந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் வரையில் உயர்ந்து அசத்தியதால் இந்நிறுவன தலைவர் ஜெப் பீசோஸ்-இன் சொத்து மதிப்பு ஓரே நாளில் 12 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.
134 பில்லியன் டாலர்
மேலும் பீசோஸ் மொத்த சொத்து மதிப்பும் 134 பில்லியன் டாலர் என்ற அளவை அடைந்து உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை ஸ்திரப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications