இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தத குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 9,435 கோடி ரூபாயை மொத்த லாபமாகப் பெற்று அசத்தியுள்ளது.
லாபம்
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் இக்குழுமத்தின் மார்ச் காலாண்டு லாபம் கடந்த வருடத்தை விடவும் 17.26 சதவீதம் அதிகரித்து 9,350 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது.
விற்பனை
அதேபோல் இக்குழுமத்தின் மொத்த விற்பனை அளவு கடந்த வருடத்தை விடவும் 29.34 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இதன் அளவு 92,889 கோடி ரூபாயாக இருந்தது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு
மேலும் இக்காலாண்டில் பெட்ரோ கெமிக்கல் பிரிவு சார்ந்த வர்த்தகத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்குக் கிடைக்கும் சராசரி லாப அளவீடு 11.5 டாலரில் இருந்து 11 டாலருக்குக் குறைந்துள்ளது.
41 சதவீத வளர்ச்சி
மேலும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 41 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இக்காலகட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகளவிலான லாபம் கிடைத்துள்ளது.
ஈவுத்தொகை
அதேபோல் ரிலையன்ஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 6 ரூபாயை ஈவுத்தொகையாக அளிக்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications