வருவாய், லாபத்தில் அமோக வளர்ச்சி.. ரிலையன்ஸ் ஜியோ கலக்கல்..!
இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டி போட்ட ரிலையன்ஸ் ஜியோ 2018ஆம் நிதியாண்டில் 4வது காலாண்டில் லாபம், வருவாய் என அனைத்திலும் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 134 ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறுகிறது.

டிசம்பர் காலாண்டை ஒப்பிடும் போது ஜியோவின் லாப அளவுகள் 1.2 சதவீதம் வரையில் உயர்ந்து 510 ரூபாய் அளவில் உள்ளது. அதேபோல் வருவாய் 3.6 சதவீதம் அளவில் உயர்ந்து 8,404 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் மார்ச் 31 முடிவில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 18.66 கோடியாக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இதன் அளவு 16.01 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications