நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இந்நிறுவனப் பங்குகள் மீது செய்து வருகின்றனர்.
52 வார உச்சம்
இன்று காலை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் மீது செய்யப்பட்ட அதீத முதலீட்டின் காரணமாக இந்நிறுவனப் பங்குகள் சுமார் 52 வரா உயர்வுக்கு அருகில் 1,010 ரூபாய் என்ற அளவைப் பதிவு செய்தது.
11.30 மணியளவில் ரிலையன்ஸ் பங்குகள் 2.25 சதவீதம் வரையில் உயர்ந்து 997.25 புள்ளிகளை அடைந்ததுள்ளது.
லாபம்
டெலிகாம் முதல் எரிபொருள் வர்த்தகம் எனப் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் ரிலையன்ஸ் மார்ச் காலாண்டில் பில்லியன் டாலர் அளவிலான லாபத்தை அடையும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
முக்கிய வர்த்தகம்
தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெட்ரோகெமிக்கல் மற்றும் டெலிகாம் சேவைகள் மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கும் காரணத்தால் சந்தை முதலீட்டாளர்கள் இப்பிரிவு வருவாய் மற்றும் லாப அளவீடுகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகின்றனர்.
சுத்திகரிப்பு லாபம்
மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு லாபம் அளவீடுகள் இந்தக் காலாண்டில் 11.6 டாலரில் இருந்து 11.3 டாலர் வரையில் குறையலாம் எந கணிப்புகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications