ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் முதன்மையானவர், இவர் மார்ச் 31 வரையில் முடிந்த காலாண்டில் ஒரு நாளுக்கு 105 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளார்.
மார்ச் காலாண்டு
மார்ச் 31 வரையில் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 9,435 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளார். இக்காலாண்டில் பெட்ரோகெமிக்கல் வர்த்தகம் சிறப்பாக இருந்த காரணத்தால் சுத்திகரிப்பில் ஏற்றப்பட்ட தொய்வை ஈடு செய்துள்ளது.
பங்கு வளர்ச்சி
2018ஆம் நிதியாண்டில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 41 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோருக்கு பெரிய அளவிலான லாபத்தை அடைந்துள்ளனர்.
4வது காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் 17.3 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
மொத்த லாபம்
2017-18ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 36,075 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 20.6 சதவீத அதிகமாகும்.
ஜியோ
டெலிகாம் சந்தை முழுமையாக மாற்றிய ஜியோ 2018ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையவில்லை என்றாலும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது முக்கியமானது, மேலும் இக்காலாண்டில் மட்டும் ஜியோ நிறுவனம் 510 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications