ஒவ்வொரு அலுவலகத்திலும், நிதியாண்டின் தொடக்கத்தில், உங்கள் முதலீடுகளுக்கான அறிவிப்புகளைத் தாக்கல் செய்யக்கோரி உங்கள் மனிதவளத்துறை அதிகாரி கடிதம் அனுப்புவார். இதனை ஏற்று அதன் படி நடப்பது மிகவும் நல்லது. இல்லையேல், உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை டிடிஎஸ் என்ற வரியாகக் கழிக்கப்படும். மேலும் அந்தத் தொகை, ஆண்டு முடிவில் உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்த பின்னர்த் தான் உங்கள் கைக்குத் திரும்பக் கிடைக்கும்.
இதில் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தால் எப்போது டிடிஎஸ் கழிக்கப்படும்:
60 வயதிற்குக் குறைவாக உள்ள , இந்திய குடியுரிமை பெற்ற ஒருவரின் வருட வருமானம் 2.5 லட்சம் ரூபாயாக இருந்தால் அந்தத் தொழிலாளருக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தால் டிடிஎஸ் கழிக்கப்படும்.
ஒரு வருடத்தில் செலவுகள் மற்றும் முதலீடுகளைச் சொன்னதன் பின்னர்ச் சம்பளத்தில் டிடிஎஸ் கழித்தல் எவ்வாறு செய்யப்படுகிறது:
நீங்கள் காட்டிய முதலீடு மற்றும் செலவீனங்களுக்கு ஏற்ப உங்கள் வருமானத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும். இதற்கேற்ப உங்கள் வரிக்குரிய வருமானமும் குறையும். உதாரணத்திற்கு, ஒரு நிதியாண்டின் உங்கள் மொத்த வருமானம் ரூபாய். 6,00,000 என்றால், ஒரு வருட காலத்திற்கான வரியாக ரூபாய். 33,800 வரியாக உங்கள் நிறுவனம் மூலம் கழிக்கப்படும். ஆனால் பகுதி 80சி க்கு கீழாக ரூபாய் 1,50,000, க்கு நீங்கள் ஆதாரம் காண்பித்தால், உங்கள் மொத்த வருமானம் ரூபாய்.4.5 லட்சம் என்று கணக்கிடப்பட்டு உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.
நிதியாண்டின் ஆரம்பத்தில் நீங்கள் செய்த முதலீடுகளின் அறிவிப்பு, உண்மையான முதலீடுகளிலிருந்து வேறுபடலாம்:
வரும் நிதியாண்டிற்கான ஒரு முதலீட்டு திட்டமிடலை நீங்கள் உங்கள் நிறுவனத்திடம் ஒப்படையுங்கள். இதனை வைத்து அவர்கள் டிடிஎஸ் தொகையை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஆண்டின் இறுதியில் வரித் தொகையைத் திருப்பித் தரும்போது , உங்கள் நிறுவனம், உங்கள் பல்வேறு முதலீடுகளையும் நீங்கள் கொடுத்த ஆதாரங்களையும் குறுக்கு விசாரணை செய்யலாம்.
உங்கள் முதலீடுகளை வருடம் முழுவதும் செய்து கொண்டே இருங்கள். ஆண்டின் கடைசி மாதம் வரை இதற்காகக் காத்திருக்க வேண்டாம்.
குறிப்பிடத்தக்க மற்றொரு முக்கியக் குறிப்பு ஒன்று உள்ளது. அது, உங்கள் முதலீடுகளை நீங்கள் நிறுவனத்திடம் அறிவித்த அதே தலைப்பில் அல்லது அதே வழியில் முதலீடு செய்வது ஆகும்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications