ஐரோப்பிய சந்தையில் முன்னணி மென்பொருள் நிறுவனமாக இருக்கும் கேப்ஜெமினி, ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் வாயிலாக ஆசியா மற்றும் அமெரிக்கச் சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது.
இந்நிலையில், கேப்ஜெமினி ஊழியர்களுக்கு இந்த வரும் அளிக்கப்படும் ஊதிய உயர்வில் மிகப்பெரிய அளவிலான துரோகம் செய்துள்ளதாக இந்நிறுவன ஊழியர்கள் கூறுகின்றனர்.
ஊழியர்கள் கதறல்
இந்த வருடத்திற்குச் சம்பள உயர்வுகளை ஐடி நிறுவனங்கள் கொடுத்து வரும் நிலையில், கேப்ஜெமினி அதன் ஊழியர்கள் தானாக வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு ஜீரோ ஹைக் அதாவது ஊதிய உயர்வு எதுவும் அளிக்காமல் உள்ளது.
டிவிட்டர்
இதைகுறித்துச் சனிக்கிழமை முதல் கேப்ஜெமினி ஊழியர்கள் டிவிட்டரில் கேப்ஜெமினி தங்களுக்குத் துரோகம் செய்து விட்டது எனப் பல்வேறு விதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
கேப்ஜெமினி ஊழியர்கள்
ஏப்ரல் மாதத்தில் 2வது முறையாகக் கேப்ஜெமினி ஊழியர்கள் சமுக வலைத்தளத்தில் #CapgeminiBetraysEmployees என் ஹேஷ்டேக்-இல் அதன் ஊழியர்களுக்கு 0.50% முதல் ஜீரோ ஹைக் கொடுத்துள்ளது எனப் பலர் பதிவுகளை விட்டுள்ளனர்.
2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கேப்ஜெமினி நிலையான 7 சதவீத வளர்ச்சி மற்றும் 315.3 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
நிர்வாகம் பதில்
இந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்த நிலையில் கேப்ஜெமினி நிர்வாகம் சிறந்த ஊழியர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து சரியான முறையில் ஊதிய உயர்வு வழங்க வழிவகைச் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மோசமான நிர்வாகம்
சிறப்பாக பணியாற்றிய குழுவிற்கு கிடைத்தது. 0% ஊதிய உயர்வு.
92% ஊழியர்கள்
கேப்ஜெமினி நிறுவனத்தில் 92 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை.
இதுதான் திட்டமா..?
கேப்ஜெமினி தன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் வெளியேற்றியதற்கு முக்கிய காரணம் அவர்கள் தானாக வெளியேற வைக்க வேண்டும் என்பதற்காகவே.
இது என்ன கொடுமை..?
ஒரு பக்கம் கேப்ஜெமினி சிறப்பான காலாண்டு வளர்ச்சியை பெற்றிருக்கும் போது மறுபுறம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் உள்ளது.
ஏலம்
நாங்க 7 பேர் இருக்கோம். யாராவது ஏலம் எடுக்க தயாரா..?
இடமில்லை.
நீங்க கொடுத்த ஊதிய உயர்வை வைக்க வீட்டில இடம் இல்ல. ஆதலால் இதை உயர் நிர்வாக குழுவிற்கு நன்கொடை அளிக்க விரும்புகிறேன்.
படி படியான நீக்கம்..
முதல பிஸ்கட், அப்புறம் டாய்லெட் பேப்பர் இப்போ சம்பளத்தில் எங்களது ஊதிய உயர்வை எடுத்துவிட்டார்.
அதே கேள்வி..
நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமும், ஊதிய உயர்வு 0% ஆக இருந்தால் அடுத்த 5 வருடத்தில் மோசமான நிலையில் இருப்பேன்.
துரோகம்
இதற்கு பெயர் தான் துரோகம்
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications