இந்தியாவில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஒரு வாரமாகப் பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் தொடர்ந்து நிலைப்பாட்டில் வைத்துள்ளது.
சர்வதே சந்தைக் கச்சா எண்ணெய் விலை மற்றும் நாணய பரிமாற்ற விலையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்ற வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக விலையில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காமல் இருப்பதே ஏன்?
பெட்ரோல், டீசல் விலை
இதன்படி கடந்த ஒரு வாரமாக ஒரு லீட்டர் பெட்ரோல் 74.63 ரூபாயும், டீசல் 65.93 ரூபாய் அளவிலும் உள்ளது (டெல்லி விலை நிலவரம்). செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் விலை மாறாமல் உள்ளது, இக்காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றியுள்ளது, ஆயினும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறவில்லை.
சரிவு
இந்திய எண்ணெய் சந்தையில் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் சுமார் 90 சதவீத சந்தையை ஆட்சி செய்து வருகிறது.
தற்போது விலை மாறாமல் இருக்கும் காரணத்தால் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 9 முதல் 16 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
என்ன காரணம்..?
6 நாட்களாக விலை மாற்றாமல் இருப்பதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்யும்போது, மத்திய அரசு கர்நாடக தேர்தலையொட்டி எண்ணெய் நிறுவனங்களை விலை உயர்த்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மறுப்பு
ஆனால் எது அரசு தரப்பு சரி, எண்ணெய் நிறுவனங்களும் சரி தொடர்ந்து மறுத்து வந்தாலும், சர்வதேச சந்தையில் சில பைசாக்கள் உயர்ந்தாலும், உடனேயே உயர்த்தும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 6 நாட்களாக விலையை உயர்த்தாமல் இருப்பதற்கு என்ன காரணம்.
விலை நிலவரம்
ஏப்ரல் 24-29 வரையிலான காலத்தில்
டெல்லியில் பெட்ரோல் 74.63 ரூபாய், டீசல் 65.93 ரூபாய், கொல்கத்தாவில் 77.32 ரூபாய், டீசல் 68.63 ரூபாய், மும்பையில் 82.48 ரூபாய், டீசல் 70.2 ரூபாயும், சென்னையில் 77.43 ரூபாயும், டீசல் 69.56 ரூபாயுமாக உள்ளது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications