விராத் கோஹ்லி, அனுஷ்கா ஷர்மா திருமணத்தை அடுத்து விரைவில் பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் சோனம் கபூர் விரைவில் ஆனந்த் அவுஜா எனும் பிஸ்னஸ்மேன்-ஐ திருமணம் செய்ய உள்ளார் என்று செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.
எனவே யார் இந்த ஆனந்த் அவுஜா என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
யார்?
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹரிஷ் அவுஜாவின் பேரன் தான் ஆனந்த் அவுஜா. அதே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் தற்போது இவர் செயல்பட்டு வரும் நிலையில் அமித் மற்று அனந்த் என இரண்டு சகோதரர்கள் இவருக்கு உள்ளனர்.
படிப்பு
டெல்லியில் உள்ள அமெரிக்கன் ஸ்கூல் ஆப் எம்பசியில் பள்ளி படிப்பை முடிந்த ஆனந்த் யூனிவர்சிட்டி ஆ பென்சில்வேனியாவில் பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். 2010-ம் ஆன்உ வாஹ்ர்னனில் எம்பிஏ படிக்கச் சென்ற இவர் அதனை முடிக்கவில்லை.
வேலைகள்
டியூட்சே வங்கியில் சர்வதேச நிதி வேலைகளைப் புரிந்துகொள்ள pஅயிற்ச்சி செய்துள்ளார். அதன் பிறகு மேகிஸ் இன்க் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இந்த மேகிஸ் இன்க் ஆனந்த்-ன் மாமாவின் ரீடிஎல் நிறுவனமாகும். லாஸ்ட் ஸ்போர்ட்ஸ்வியர் மற்றும் அமேசான்.காம் நிறுவனத்திலும் அமெரிக்காவில் இவர் பணிபுரிந்துள்ளார்.
ஸ்னீக்கர்ஸ்
அவுஜாவின் ஆடை மற்றும் ஸ்னீக்கர்கள் மீதுள்ள காதல் இவரை மல்டி பிராண்டு ஸ்னிக்கர் நிறுவனத்தைக் கட்டமைத்தார். 2011-ம் ஆண்டு ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் ஆடை பிராண்டான ‘பாஹ்னே'-ஐ அறிமுகம் செய்தார்.
சோனம் கபூர்
2017-ம் ஆண்டு ஜிகியூ இந்தியா நிறுவனம் அவுஜாவை சீக்கர்ஸ் ஆப் இன்ஸ்டாகிராம் என்று பட்டியலிடப்பட்டது. அதில் அன்மையில் சோனமும் இணைந்துள்ளார். மே மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க வாய்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications