மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்களுக்கு இனி ஆதார் கார்டு இல்லாமல் மொபைல் சிம் கார்டுகளை அளிக்கலாம் என்றும், முன்பு இருந்தது போன்றே ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஆவணமாகப் பெற்றால் போதும் என்றும் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டெலிகாம் துறையின் செயலாளர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம்
ஏற்கனவே ஆதாரில் உள்ள சிக்கல்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை சிம் கார்டுகளுக்கு ஆதார் இணைப்பு தேவையில்லை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தொலைத்தொடர்பு துறை அமைச்சகமும் சிம் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. ஆதாரயும் ஒரு ஆவணமாக வேண்டும் என்றால் பெற்றுக்கொண்டு சிம் கார்டினை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பழைய முறை பின்பற்ற வேண்டும்
மொபைல் சேவை வழங்கி வந்த நிறுவனங்கள் பழைய வாடிக்கையாளர்களை எப்படி ஆதார் இணைப்புச் செய்ய வைப்பது என்று சிக்கி தவித்து வந்த நிலையில் இந்தத் தீர்ப்பு அவர்களை மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது.
என்ஆர்ஐ
மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் மூலம் என்ஆர்ஐ மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இது மிகப் பெரிய விலக்கை அளித்துள்ளது என்று கூறலாம்.
ஆதார்
இன்னும் கோடி கணக்கான மக்கள் ஆதார் கார்டு இல்லாமல் உள்ள போது டெலிகாம் நிறுவனங்கள் அவர்களுக்கு அதார் இல்லாமல் சிம் கார்டு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர்களுக்கு ஆதார் இல்லாமல் சிம் கார்டு வங்க முடியாது என்ற நிலை இருந்து வந்தது. மொபைல் நிறுவனங்கள் இது குறித்துக் கருத்துக்களை வெளியிடாத நிலையில் அரசு தரப்பு இதனை மிக முக்கியமான அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது
ஆதார் இல்லை என்பதற்காக வாடிக்கையாளர்களுக்குத் தொலைத்தொடர்பு சேவை வழங்கு முடியாது என்று தவிர்க கூடாது என்றும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதார் சரிபார்ப்பு முறையினை எளிமையாக எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் இதற்குக் காலவரையின்றி விலக்கு அளித்துள்ளது என்றும் தேவையில்லாமல் பழைய வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications