பட்டதாரிகள் மாடு மேய்க்கலாம், திருப்பூரா முதல்வரை ஆதரித்து டிவிட் போட்ட அமுல் நிர்வாக இயக்குநர்!

திரிப்பூரா முதலமைச்சர் அன்மையில் கால்நடை கவுன்சில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற போது படித்த பட்டதாரிகள் அரசு வேலை வேண்டும் என்று இளைஞர்கள் காத்திருக்காமல் பான் ஷாப் அல்லது மாடு வளர்க்கலாம் என்றும் நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதே போன்று இந்திய பிரதமராக உள்ள மோடி அவர்களும் பக்கோடா விற்பதும் ஒரு வேலை தான் என்று கூறியது மிகப் பெரிய அளவில் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

தற்போது திருப்பூரா முதல்வரின் மாடு வளர்க்கலாம் என்று கூறி இருப்பதை அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஆர் எஸ் ஷோதி ஆதரித்து ஒரு டிவிட்டும் போட்டுள்ளார்.

பான் ஷாப் போதும்

பான் ஷாப் போதும்

திருப்பூரா முதல்வர் அரசியல் கட்சிகள் பின் அரசு வேலை வேண்டும் என்று கூறாமல் பான் ஷாப் அமைத்துக்கொள்ளுங்கள், எளிதாக 5 லட்சம் வரை உங்கள் வங்கி இருப்புத் தொகை உயரும்.

பான் ஷாப் அல்லது மாடு வளர்த்தல்

பான் ஷாப் அல்லது மாடு வளர்த்தல்

மத்திய அரசு வழங்கும் பிதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெற்று பான் ஷாப் அல்லது மாடு வளர்த்து பால் விற்கலாம் என்று எல்லாம் கால்நடை கவுன்சில் நடத்திய கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

பேங்க் பேலன்ஸ்

பேங்க் பேலன்ஸ்

அனைவர் வீட்டிலும் ஒரு மாடு இருக்க வேண்டும். ஒரு லிட்டர் பால் 50 ரூபாய் என விற்கப்படுகிறது. வேலை இல்லை என்று கவலைபடாமல் பால் விற்றால் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை தங்களது வங்கி இருப்புத் தொகையினை உயர்த்தலாம் என்று கூறியுள்ளார்.

ஆயிரம் கணக்கில் வருவாய்

ஆயிரம் கணக்கில் வருவாய்

வேலை இல்லாத இளைஞர்கள் வங்கிகளில் 75,000 ரூபாய் வரை கடன் பெற்று பால் உற்பத்திக்காக மாடு வளர்த்தால் மாதம் 25,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.

டிவிட்

இதனை ஆதரித்து டிவிட் போட்ட அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஆர் எஸ் சோதி "குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து திருப்பூரா ஒவ்வொரு மாதமும் கோடி கணக்கான ரூபாய் செலவு செய்து பால் இறக்குமதியைச் செய்து வருகிறது. இளைஞர்கள் 10 மாடுகள் வளர்த்தால் 6 முதல் 7 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். இது ஒரு சிறந்த யோசனை. இது போன்று குஜராத்தில் 8000-க்கும் அதிகமான பண்ணைகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+