மஹிந்தரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்தரா சில வாரங்களுக்கு முன்பு தனது வாட்ஸ்ஆப்-க்கு வந்த ஒரு புகைப்படத்தினை டிவிட் செய்து யார் இந்த ஷூ மருத்துவர், இவர் ஐஐஎம் கல்லூரியில் பேராசியராக இருக்க வேண்டியவர் என்றும் இவரைப் பற்றித் தகவல் தெரிந்தால் தனக்குத் தெரிவிக்குமாறும் இவரது ஸ்டார்ட்அப்-ல் தான் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.
தற்போது அவரைக் கண்டுபிடுத்துவிட்டதாகவும் ஹரியானவை சேர்ந்த 'நரசீராம்' தான் 'அடிப்பட்ட ஷூக்களுக்கான மருத்துவர் என்றும் தெரிவித்துள்ளார்.
பணம் வேண்டாம்! தொழில் செய்யச் சிறந்த இடம் போதும்?
ஹரியானாவில் உள்ள நரசீராம்-ஐ ஆனந்த் மஹிந்திராவின் குழு சந்தித்ததாகவும், இவரது தொழிலை மேம்படுத்த பணம் கேட்காமல் தற்போது உள்ளதை விடச் சிறந்த இடத்தில் கடையை அமைத்துக் கொடுத்தால் போதும் என்று கேட்டதாகவும், இதற்காகத் தனது வடிவமைப்பு ஸ்டூடியோ சிறப்பான ஒரு பெட்டிக்கடை போன்ற கியாஸ்க்கை வடிவமைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐஐஎம்
ஆனந்த் மகேந்திரா ‘இந்த மனிதர் ஐஐஎம் (இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில்) மார்க்கெட்டிங் படிப்பினை கற்றுத்தர வேண்டியவர்" என்ற டிவிட்டினை புகைப்படத்துடன் பதிவேற்றிய நிலையில் அதனை 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் விரும்பியுள்ளார்கள், 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அதனை ரீடிவிட் செய்து இருந்தனர்.
படத்தில் என்ன இருந்தது
ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள படத்தில் ஒரு செறுப்பு தெய்க்கும் தொழிலாளி அமர்ந்திருக்குகிறார். அவருக்குப் பினால் இந்தியில் இங்குக் காயம் அடைந்த செறுப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும், பார்வை நேரம் காலை 9 முதல் 1 மணி வரை. மதிய உணவு இடைவேளை 1 முதல் 2 மணி வரை, பின்னர் மீண்டும் 2 மணி முதல் 6 மணி வரை ஷூக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும், ஜெர்மன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டார்ட்அப் முதலீடு
மேலும் அடுத்த டிவிட்டில் இவரது ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தான் முதலீடு செய்ய விரும்புவதாகவும், யாராவது இவரைக் கண்டு பிடித்தால் தன்னுடன் விவரங்களைப் பகிரவும் என்றும் கேட்டு இருந்தார்.
ஆட்டோ டூ ஸ்கார்பியோ
இதே போன்று ஒரு முறை மஹிந்திரா ஸ்கார்பியோ மீது உள்ள காதலால் தனது ஆட்டோவை ஸ்கார்பியோ கார் போன்று மாற்றிப் பயன்படுத்திய ஆட்டோ டிரைவரிடம் இருந்து அதனைப் பெற்றுக்கொண்டு ஸ்கார்பியோ கார் ஒன்றை ஆனந்த் மகேந்திரா பரிசளித்த நிகழ்வு நடந்துள்ளது.
பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனத்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா மூலம் தரவு மோசடி நடைபெற்ற போதும் இந்தியாவின் சமுக வலைத்தளம் ஒன்றை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் ஆன்ந்த் மகேந்திரா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications