உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா நாடுகளைத் தாண்டி வர்த்தகத்தை மேம்படுத்தத் தனிப்பட்ட கவனத்தைத் தென் ஆசிய பகுதியின் மீது செலுத்தி வருகிறது.
இதன் வாயிலாக மார்ச் காலாண்டில் தென் ஆசிய பகுதியில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று ஆப்பிள் அசத்தியுள்ளது.
இந்தியா
தற்போதைய நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்குத் தென் ஆசிய சந்தையில் முக்கிய வர்த்தகச் சந்தையாகத் திகழ்வது இந்தியா தான். ஆகையால் இந்தியாவில் ஐபோன் மட்டும் அல்லாமல் தனது பிற சேவைகளையும், அதாவது ரீடைல் உட்பட அனைத்துச் சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது.
அதிரடி வளர்ச்சி
ஆப்பிள் நிறுவனத்தின் தென் ஆசிய சந்தை வர்த்தகத்தில் மட்டும் மார்ச் காலாண்டு வருமானத்தில் மட்டும் சுமார் 20 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கூட்டணி
ஆயினும் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களைக் காட்டிலும் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கான சந்தை மிகவும் குறைவு தான், இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது எல்ஈடி நெட்வொர்கில் அதிகளவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் கூட்டணி வைக்கத் திட்டமிட்டுள்ளது.
16 பில்லியன் டாலர்
6 மாத வருவாய் அளவீட்டில் ஆப்பிள் இந்தியா புதிய வருவாய் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் மார்ச் காலாண்டில் ஆப்பிள் சர்வதேச சந்தையில் செய்த வர்த்தகத்தில் வாயிலாகச் சுமார் 61 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது.
இது கடந்த வருடத்தை விடவும் 16 சதவீதம் அதிகமாகும். மேலும் மொத்த லாபத்தின் அளவு 13.8 பில்லியன் டாலராகும்.
சீனா
இந்தியாவைத் தொடர்ந்து சீனாவின் ஆப்பிள் நிறுவன வர்த்தகத்தில் வாயிலாக வருமானத்தின் அளவு 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை பங்கீடு 2-3 சதவீதம் மட்டுமே.


Click it and Unblock the Notifications