நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் ஆகியவை லாபத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் ஹெச்சிஎல் மட்டும் லாபத்தில் சரிவை சந்தித்து அதன் முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லாபம்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் புதன்கிழமை காலையில் மார்ச் மாத காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலாண்டில் பிற முன்னணி நிறுவனங்களைப் போல் அல்லாமல் ஹெச்சிஎல் லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது.
இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் கடந்த வருடத்தை விடவும் 4.3 சதவீதம் வரையில் சரிந்து 2,227 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது, இதேபோல் கடந்த நிதியாண்டில் இக்காலகட்டத்தில் 2,248.60 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்தது.
வருவாய்
அதபோல் கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 12,053 ரூபாய் அளவிலான வருவாய் பெற்ற ஹெச்சிஎல் 2018 மார்ச் காலாண்டில் 9.3 சதவீதம் வரையில் உயர்ந்து 13,179 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாலர் வருவாய்
கடந்த இரு காலாண்டுகளை ஒப்பிடுகையில் டாலர் வருவாய் 2.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் லாபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கணிசமாகக் குறைந்துள்ளது.
வளர்ச்சி
இந்நிலையில் 2019ஆம் நிதியாண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் 9.5 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதம் வரையில் உயரும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் புதிய முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனம் மீதான முதலீட்டில் அதிக லாபம் உள்ளது.
ஊழியர்கள் கதறல்..!
ரொம்ப பிடிச்சிருக்கு


Click it and Unblock the Notifications