என்னைப் போன்று நீங்கள் அதிகம் ஷாப்பிங் செய்பவர்களா, மாத கடைசியில் பணம் இல்லாமல் நீங்கள் விரும்பியதை வாங்க முடியவில்லையா? கவலை வேண்டாம், வங்கிகள் இதற்காகவே கிரெடிட் கார்டை அளிக்கிறது.

பிரிட்ஜ், ஆடைகள் என எதை வாங்க வேண்டும் என்றாலும் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி விட்டு உங்கள் கைகளில் பணம் இருக்கும் போது செலுத்திவிடலாம். ஆனால் குறிப்பிட்ட கால அளவிற்குள் இதனைச் செலுத்த வேண்டும். எல்லாவற்றுக்கு வங்கிகள் சென்று கடன் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் அனைவரும் சரியான நேரத்தில் கட்டணங்களைச் செலுத்துவதில்லை. அதில் நீங்களும் ஒருவர் என்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
பொதுவாக நான் எனது போனில் இதற்காக அலர்ட்டுகளைச் செய்து வைத்துக்கொள்ளவே. ஒரு வேலை அப்படியும் மறந்துவிட்டால், இணையதளம் இல்லாமல் பிற முறைகளிலும் செலுத்த முடியவில்லை என்றால் என்ன செய்வது?
ஆம், சில நேரங்களில் சரியான நேரத்தில் கிரெடிட் கார்டு பில்லை செலுத்த முடியாமல் அபராதம் செலுத்த நேரிடும்.
ஆனால் எவ்வளவு செலுத்த வேண்டும்? பில் தொகை மட்டுமா? கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்றால் எவ்வளவு செலுத்த வேண்டும்?
கிரெடிட் கார்டு என்றாலே நாம் கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும், அதனைத் தாமதமாகச் செலுத்தும் போது கூடுதல் அபராதம் மற்றும் வட்டி என நாம் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தினை அதற்குத் திருப்பி அளிக்க வேண்டும்.
அபராத தொகை எப்படிக் கணக்கிடப்படுகிறது?
வட்டியானது செலுத்த வேண்டிய பில் தொகை * மாத கட்டண சதவீதம் * 12 மாதங்கள் * தமதமாகச் செலுத்திய நாட்கள்/364 என்ற சூத்திரத்தின் கீழ் கணக்கிடப்படும். இது நாம் செலுத்த வேண்டிய தொகையினை மேலும் அதிகரிக்கும்.
கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் 60 நாட்கள் வரை வங்கிகள் கருணை காலம் அளிக்கும்.. இல்லை என்றால் வங்கிகள் அபராதம் விதிக்கும். கருணை காலத்திலும் வங்கிகள் அபராதம் விதிக்கும். அது 300 முதல் 500 ரூபாய் வரை இருக்கும்.
கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மீதான வட்டி விகிதம் ஒருவர் செய்யும் பரிவர்த்தனையைப் பொருத்தத்து. பொதுவாகக் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும்போது வட்டி விகிதம் மதத்திற்கு 1.5 சதவீதமாக இருக்கும். இதுவே ஏடிஎம்-ல் பணம் எடுத்து இருந்தால் 2.5 சதவீதம் மாத வட்டியாகும். இரண்டு செய்தால் வங்கிகள் எது அதிகமோ அதனை வசூலிக்கும்.
வாங்கிய கடனை தாமதாகச் செலுத்தும் போது நாம் அதிகமாகப் பணச் செலுத்த வேண்டும். அதாவது நமது பாக்கெட்டினை காலியாக்கி வங்கிகளை மேலும் பணம் சம்பாதிக்க அனுமதிக்கின்றோம் என்று கூறலாம். எனவே கார்டை ஸ்வைப் செய்யும் முன்பு நாம் ஏன் வங்கிக்கு வட்டியைச் செலுத்த வேண்டும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications