பாபா ராம்தேவ் தலைமை வகிக்கும் பதஞ்சலி மிகவும் குறுகிய காலகட்டத்தில் மகிப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்திய நுகர்வோர் சந்தையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கு அடுத்ததாகத் தற்போது பதஞ்சலி நிறுவனம் உள்ளது.
ஆயினும் யோகா குருவாக விளங்கும் பாபா ராம்தேவின் வர்த்தகத் தாகம் தீரவில்லை என்றே சொல்ல வேண்டும்.
புதிய போட்டி
இந்திய நுகர்வோர் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் பதஞ்சலி நிறுவனம் தற்போது பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களத்தில் இறங்கியுள்ளது.
ருச்சி சோயா
நாட்டின் மிக்பெரிய சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ருச்சி சோயா, தற்போது மிகப்பெரிய கடன் நெருக்கடியில் மூழ்கியுள்ளது மட்டும் அல்லாமல் ஐபிசி சட்டதிட்டத்தின் படி இந்த நிறுவனம் தற்போது பொதுச் சந்தையில் ஏலத்திற்கு வந்துள்ளது.
கடந்த வருடம் இந்நிறுவனத்தின் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் வழக்குத் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலைகள்
ருச்சி சோயா தற்போது இந்தியாவின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் வருடத்திற்குச் சுமாக் 37.2 லட்சம் மில்லியன் டன் எண்ணெய் தயாரிக்கிறது.
இதுமட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் சுமார் 24 இடத்தில் அரைப்புத் தளம், மில், சுத்திகரிப்பு மற்றும் பேக்கிங் தொழிற்சாலைகளை வைத்துள்ளது. இந்நிறுவனத்திடம் தற்போது நுட்ரெல்லா, மகாகோஷ், சன்ரிச், ருச்சி கோல்டு, ருச்சி ஸ்டார் ஆகிய பிராண்டுகள் வைத்துள்ளது.
அதேபோல் இந்தியாவில் இருந்து அதிகளவில் சோயா பொருட்களை ஏற்றுமதி செய்வதும் ருச்சி சோயா தான்.
கடன்
நிறுவனமும், வர்த்தகமும் பெரியதாக இருந்தாலும் நிறுவனத்தின் கடன் அளவு 12,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 4,000 கோடி ரூபாய் அளவிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
பதஞ்சலி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்காகத் தனது எண்ணெய் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக ருச்சி சோயாவிடம் 2017 மார்ச் மாதத்தில் ஒப்பந்தம் செய்தது.
அடுத்தச் சில மாதங்களில் அதே எண்ணெய்யை விற்பனை செய்யவும், விநியோகம் செய்யவும் மற்றொரு ஒப்பந்தம் செய்தது பதஞ்சலி.
மறுப்பு..
பதஞ்சலிக்கு உதவி செய்ய முடியாத நிலையில் ஒப்பந்தத்தில் ரத்துச் செய்ய ருச்சி சோயா முடிவு செய்த நிலையில் ஒப்பந்தம் முறிந்தது.
ஏலம்
இந்நிலையில் கடன் தலைக்கு ஏறிய நிலையில் தற்போது ருச்சி சோயா ஏலத்திற்கு வந்துள்ளது. இந்நிறுவனத்தை வாங்க யாரும் எதிர்பார்க்காத வரையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலத் திட்டமிட்டு பதஞ்சலி சுமார் 9,000 கோடி ரூபாய்க்கு வாங்க திட்டமிட்டு விருப்பம் தெரிவித்துள்ளது.
போட்டி
இந்நிலையில் ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க காட்ரிஜ், அதானி, வில்மார், இமாமி எனப் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வாங்க போட்டி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ராஜா
இந்தப் போட்டியில் பதஞ்சலி வெற்றிபெற்றுவிட்டால் அடுத்தச் சில மாதங்களிலேயே பதஞ்சலி நுகர்வோர் சந்தையில் முடிசூடா மன்னனாக விளங்க வாய்ப்புகள் அதிகம்.
25000 கோடி ரூபாய்
பதஞ்சலி நிறுவனம் அடுத்த 3-5 வருடத்தில் தனது வர்த்தகத்தை 20,000 கோடி முதல் 25,000 வரையில் உயர்த்தப் பல திட்டங்களைத் தீட்டி வருகிறது. இதன் வெற்றியில் பன்னாட்டு நிறுவனங்கள் காணாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது.
2017ஆம் நிதியாண்டில் பதஞ்சலி சுமார் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications