தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. இப்படிப்பட்ட வெனிசுலா இந்திய அரசு டிஜிட்டல் கரன்சிகள் மூலமாகக் கச்சா எண்ணெய்க்கான பணத்தினைச் செலுத்தினால் 30 சதவீதம் வரை சலுகை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் தற்போது பேரல் 75 டலார் என்று விலை உயர்ந்துள்ள நிலையில் வெனிசுலா இந்தச் சலுகையினை அறிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசு கிரிப்டோகரன்சிகளுக்கு எதிராக உள்ளதால் இதனை ஏற்க மறுத்து வருகிறது.
பெட்ரோ
வெனிசுலாவை சார்ந்த பெட்ரோ டிஜிட்டல் கரன்சியானது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அன்மையில் டெல்லியில் கூட இதற்காக எக்ஸ்சேஞ் துவங்கப்பட்டது..
வெனிசுலா அரசால் சென்ற ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பெட்ரோ டிஜிட்டல் கரன்சியானது பிப்ரவரி மாதம் வரை 3.8 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
அலுவலகக் கரன்சி
வெனிசுலா அரசு பெட்ரோ டிஜிட்டல் கரன்சியை 2020-ம் ஆண்டு அலுவலகக் கரன்சியாக அறிவிக்கும் திட்டத்தில் உள்ள நிலையில் இது அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறும்.
இந்தியாவிற்கு அளிக்கப்படும் சலுகை
ஆனால் இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய் வாங்க 30 சதவீதம் வரை கச்சா எண்ணெய்க்குச் சலுகை அளிப்பதாகவும் அதற்கு இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர்களைத் தவிர்த்து பெட்ரோ டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
இறக்குமதி
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வது கடந்த 5 வருடமாகக் குறைந்து வருகிறது. அதே நேரம் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியும் 2012-ம் ஆண்டு முதல் சரிந்து 20 சதவீதம் வரை குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications