45 வருடங்களாக அமெரிக்காவின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வரும் கூப்பர்.. யார் இவர்?

By Valliappan N
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

45 வருடங்கள் அமெரிக்க அரசு கண்களில் விரலைவிட்டு ஆட்டிய நாயகனின் பெயர் டிபி கூப்பர் அப்போது இவரின் வயது ஏறத்தாழ 40 இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்த தேதி 1971 நவம்பர் 24. போர்ட்லாந்தில் இருந்து சீயட்ல செல்லும் விமானத்தில் 36 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் இவரும் பயணம் செய்தார். விமானம் விண்ணில் பறக்க தொடங்கிய பின் கூப்பர் ஒரு விமானப் பணிப்பெண்ணிடம் ஒரு சிறு குறிப்பைக் கொடுத்துப் படித்துப் பார்க்க சொன்னார்.

அதில் என்ன எழுதியிருந்தார்?

அதில் என்ன எழுதியிருந்தார்?

அதில் நான் இந்த விமானத்தைக் கடத்த போகிறேன் என எழுந்திருந்தது. இதைப் பார்த்த பணிப்பெண் பதட்டப்படக் கூப்பர் தன்னிடம் இருந்த பாம்-ஐ காட்டி அவரை மிரட்டினார். மேலும் கூப்பர் கூறுகையில் நான் உங்களை ஒன்றும் செய்யமாட்டேன் எனக்குத் தேவை பணம் தான் என்றார்.

பினை தொகை

பினை தொகை

இதைத் தொடர்ந்து விமான ஓட்டிகள் மூலம் சீயட்ல அரசிடம் 2 லட்ச அமெரிக்க டாலர் வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

உறுதி அளித்த அமெரிக்கா

உறுதி அளித்த அமெரிக்கா

இதை ஏற்ற அரசு சீயட்ல விமானம் தரையிறங்கியவுடன் தருகிறோம் என உறுதி அளித்தது, மற்றொரு புறம் அரசு இவரை அங்கையே எப்பிஐ வைத்துப் பிடித்துவிடலாம் எனக் கணக்கிட்டது. சீயட்ல விமானம் இறங்கிய பின் கூப்பர் இடம் காசு ஒப்படைக்கப்பட்டது, அதன் பின் அவர் பயணிகளை விடுவித்தார் ஆனால் பணியாளர்களை விடுவிக்கவில்லை.

காத்திருந்த அதிர்ச்சி

காத்திருந்த அதிர்ச்சி

கூப்பர் மீண்டும் மெக்ஸிகோ செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அதையும் ஏற்ற அரசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. அரசும் மீண்டும் அந்தச் சந்தர்ப்பத்தின் மூலம் அவரைப் பிடிக்கலாம் என்று எண்ணியது. ஆனால் மெக்ஸிகோ செல்லும் பாதி வழியில் அவர் விமானத்தில் இருந்த பாராச்சூட்-ஐ பயன்படுத்திக் கிழே குதித்துவிட்டார். இவரை இன்று வரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. 45 ஆண்டுகள் களித்து இவரைப் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்டது அமெரிக்க அரசு.

வீடியோ

அமெரிக்காவில் திருடனை கண்டறியாத ஒரே விமானக் கடத்தல் சம்பவம் இது ஆகும். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளக் கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America's unsolved flight hijack mystery by cooper

America's unsolved flight hijack mystery by cooper
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X