75 சதவீத பங்குகளை வாங்கும் வால்மார்ட்.. பிளிப்கார்ட் நிர்வாகம் ஒப்புதல்..!
இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்-இல் அமெரிக்கா ரீடைல் நிறுவனமான வால்மார்ட் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றத் திட்டமிட்ட நிலையில் தற்போது 75 சதவீத பங்குகளை வாங்க பிளிப்கார்ட் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களது பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனம் 20 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட நிலையில், தற்போது 75 சதவீத பங்குகளுக்குச் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான தொகை பிளிப்கார்டில் முதலீடு செய்ய உள்ளது.
இதில் முக்கியமாகச் சாப்ட்பேங்க் நிறுவனம் பிளிப்கார்டின் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications