கத்தார் நாட்டை மையமாகக் கொண்டு உலகில் சுமார் 150 நாடுகளுக்கும் அதிகமான விமானப் பயணிகள் மற்றும் போக்குவரத்து சேவையை அளித்து வரும் நிலையில் இந்தியாவை மையமாகக் கொண்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்தியா
கத்தார் ஏர்வேஸ் விரைவில் இந்தியாவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்தைத் துவங்குவதற்காக உரிமை பெற விண்ணப்பம் அளிக்க உள்ளது. இதன் வாயிலாக முழுமையாக இந்தியாவிலேயே வர்த்தகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முழு உரிமையாளராகக் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் இருக்கும்.
தலைவர்கள்
ஆனால் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் இந்தியர்களாக இருப்பார்கள் எனக் கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
அக்பர் அல் பேக்கர்
இதுகுறித்துக் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் அக்பர் அல் பேக்கர் கூறுகையில் இந்தியாவில் நிறுவனத்தைத் துவங்குவதற்காக விண்ணப்பத்தை அளித்துள்ளோம். விரைவில் அனைத்து ஒப்புதல்களும் அரசு தரப்பில் இருந்து கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் இதன் வாயிலாக விமானப் போக்குவரத்துக்காக உரிமையும் பெற அடுத்தகட்ட பணிகளைச் செய்யக் காத்திருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா
மேலும் தற்போது அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா விற்பனைக்கு வந்துள்ள நிலையில் இதை வாங்க கத்தார் ஏர்வேஸ் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications