ஆந்திராவில் ரூ.90 கோடி சொத்துக்களுடன் சிக்கிய அரசு அலுவலக பியூன்!

ஆந்திராவைச் சேர்ந்த நேல்லூரில் போக்குவரத்துத் துறையில் பியூன் பணியைச் செய்து வந்த ஒருவரிடம் கணக்கில் வராதா 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்துக்கள் உள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

அசையா சொத்துக்கள்

அசையா சொத்துக்கள்

துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்த வந்த பியூன் கரடு நரசிம்ம ரெட்டியின் வயது 55. லஞ்ச ஒழிப்புத் துறை இவர் வீட்டை சோதனை செய்ததில் நெல்லூரில் மட்டும் இவருக்கு 18 பிளாட்டுகள், 50.36 ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலங்கள், 2 கிலோ தங்கள் நகை, வெள்ளி சாமான்கள் போன்றவற்றைப் பரிமுதல் செய்துள்ளனர்.

கோடி கணக்கில் இன்சூரன்ஸ்

கோடி கணக்கில் இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ் திட்டங்களில் 1.1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது மட்டும் இல்லாமல். 10 லட்சம் மதிப்பிலான பிற பாலிசி ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

 ரொக்க பணம்

ரொக்க பணம்

அது மட்டும் இல்லாமல் 7.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் இவரது டேபிள் டிராவில் இருந்துள்ளது. அனைத்தும் 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

வங்கி லாக்கர்

வங்கி லாக்கர்

மேலும் நரசிம்ம ரெட்டியின் பெயரில் கூட்டுறவு வங்கி கிளைகளில் இருந்து லாக்கர்களைத் திறந்து சோதனை செய்ததிலும் பல முக்கிய ஆவணங்களைக் காவல் துறையினைக் கைப்பற்றியுள்ளனர்.

வேலை

வேலை

1984-ம் ஆண்டு 650 ரூபாய் சம்பளத்திற்கு ஆட்டண்டர் பணியில் சேர்ந்த நரசிம்ம ரெட்டி தற்போது 40,000 ரூபாய் மாத சம்பளம் பெற்று வருட்கிறார். தொடர்ந்து 34 வருடங்களாகப் பணியில் உள்ளார்.

 பிரமோஷன் தவிர்ப்பு

பிரமோஷன் தவிர்ப்பு

பிரமோஷன் பெற்றால் வேறு இடங்களுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற காரணங்களுக்காக அதனையும் வேண்டாம் என்று தவிர்த்து வந்துள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தெரிவித்தனர் .

ஒப்புதல்

ஒப்புதல்

விசாரணையின் போது நரசிம்ம ரெட்டி இந்தச் சொத்துக்கள் எல்லாம் தனது தான் என்றும் பினாமி அல்ல என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்த்தார்?

எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்த்தார்?

எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்த்துள்ளார் என்று கேட்ட போது அலுவலகம் மற்றும் செக் போஸ்ட்களில் லஞ்சமாகப் பணம் பெற்றதாகவும், அதனைத் தனக்குத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் அதிக வட்டிக்குப் பணத்தினை அளித்த தாகவும் கூறியுள்ளார்.

காவல் துறை

காவல் துறை

இந்தச் சோதனையானது லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் ரமா தேவி தலைமையில் நடந்துள்ளது. இரண்டு வங்கி லாக்கரிலும் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றும் முயறிசிகள் நடைபெற்று வருவதாகவும் அதன் பிறகு மேலும் பல முக்கிய விவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் ஜெனரல் ஆர்.பி. தாகூர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் ரிடையர்மெண்ட் பார்ட்டி

வெளிநாட்டில் ரிடையர்மெண்ட் பார்ட்டி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+