ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எளிய வரி தாக்கல் முறை & டிஜிட்டல் பே இன்சண்டிவ் போன்றவற்றிற்கு அனுமதி!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 27வது கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் ஜிஎஸ்டி தாக்கல் முறையினை எளிமைப்படுத்துதல் மற்றும் சர்க்கரை மீதான புதிய செஸ் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் போது 2 சதவீத ஊக்கத்தொகை அளிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

எனவே இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் மற்றும் பத்திரிகை வெளியீடுகளை இங்குப் பார்க்கலாம்.

6 மாதத்தில் ஜிஎஸ்டி தாக்கல் எளிமையாக்கப்படும்

ஜிஎஸ்டி கவுசில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் புதிய எளிமையாக்கப்பட்ட வரி தாக்கல் முறைக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் காம்போஸீசன் டீலர்கள் மற்றும் பூஜ்ஜியம் பரிவர்த்தனைகள் செய்துள்ள டீலர்கள் ஒவ்வொரு காலாண்டும் ஒரு முறை ஜிஎஸ்டி தாக்கல் செய்தால் போதும். இந்தப் புதிய முறையானது 6 மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்ச அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் ஜிஎஸ்டி தக்கல் செய்யும் போது தேவைப்படும் விவரங்களையும் குறைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

எப்படிப் புதிய ஜிஎஸ்டி தக்கல் எளிமையாக இருக்கும்?

எப்படிப் புதிய ஜிஎஸ்டி தக்கல் எளிமையாக இருக்கும்?

புதிய முறையில் பொருட்களை வாங்கும் ஒருவர் அதற்கான ரசீதுகளைப் பதிவேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை மற்றும் விற்பனையாளர் பதிவேற்றிய ரசீதை உறுதி செய்தால் போது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபக்கம் ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் போது பெறப்பட்டு வரும் தகவல்களின் அளவினை குறைத்து, பி2பி வணிகங்கள் ரசீதுகளின் விவரங்கள் மற்றும் வெளியில் விநியோகம் செய்யப்பட்ட பொருட்கள்வின் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும், பி2சி வணிகர்கள் வெவ்வேறு வரிக் கட்டங்கள் மீதான மொத்த வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விவரங்களை வைத்து வரி எவ்வளவு செலுத்த வேண்டும் என்று கணக்கிடப்படும். விற்பனையாளர்களின் ரசீது விவரங்களைப் பொருத்து உள்ளிட்டு வரி கடன் விவரங்கள் தானாகவே கணக்கிடப்படும்.

 

ஜிஎஸ்டிஎன் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படும்?

ஜிஎஸ்டிஎந்ல் 51 சதவீதம் நிதி நிறுவனங்கள் மற்றும் இன்ஃபோசிஸ் வசம் உள்ள நிலையில் அதனை முழுமையாக அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்று தரவு பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு வசம் உள்ள உள்ள 49 சதவீத பங்கில் 24.5 சதவீதம் மத்திய அரசுக்கும், மீதம் உள்ள 24.5 சதவீதம் மாநில அரசுக்குச் சொந்தமாகும்.

சர்க்கரை மீதான செஸ்

சர்க்கரை மீதான செஸ்

சர்க்கரை மீது புதிய செஸ் வரி விதிக்க 5 நபர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் மத்திய அரசு சர்க்கரை மீதான விலை உற்பத்தி விலைக்கும் குறைவாக உள்ளது என்பதற்காக 1,540 கோடி ரூபாய் மானியம் அளித்தது. சென்ற வாரம் ஒரு கிவிண்ட்டால் சர்க்கரைக்கு 5.5 ரூபாய் மானியம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது 100 ரூபாய் என்றால் அதற்கு 2 சதவீதம் வரை ஜிஎஸ்டி-ல் வரி விலக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 2 சதவீத சலுகை 3 சதவீதத்திற்கும் அதிகமாக வரி உள்ள பொருட்களை அளிக்கப்பஃப வாய்ப்புகள் உள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் இன்புட் டாக்ஸ் கிரெட்ட் ஆட்டோமெட்டிக் ரிவர்சல் முறையை வெளியேற்ற அனுமதி

பொருட்களை விற்பவர் வரி செலுத்தவில்லை என்றாலும் வாங்குனர்கள் மீது விதிக்கப்பட்டு வந்துகொண்டு இருந்த இன்புட் டாக்ஸ் கிரெட்ட் ஆட்டோமெட்டிக் ரிவர்சல் முறையை ஜிஎஸ்டி கவுன்சில் நீக்கியுள்ளது.

விற்பனையாளர் வரி செலுத்தவில்லை என்றால் அதற்கு அவர் தான் பொருப்பு. அதே நேரம் இருப்பினும், வாங்குபவரின் சட்டப்பூர்வமான செயல்முறை மூலம் கடன் வாங்குவதன் மூலம் வருமானம் பெறும் வியாபாரி போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கும், சப்ளையர் அல்லது சப்ளையர் நிறுவனத்தால் போதுமான சொத்து இல்லாதவர்களுடனும் சந்திப்பதும் ஒரு விருப்பமாக இருக்கும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+