கலிபோர்னியா மாகாணத்தின் தலைமையாகக் கொண்டு இயக்கும் ஐடி நிறுவனம் வெளிநாட்டு நாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்திக் குறைவான சம்பளத்தை அளித்துப் பெரிய அளவில் ஏமாற்றியுள்ளது.
தற்போது இந்தப் பிரச்சனை அமெரிக்காவில் மிகப்பெரியதாக வெடித்துள்ளது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில்ல அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனம்
கலிபோர்னியாவின் கிளவுட்விக் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நீண்ட கால ஹெச்1பி விசா அடிப்படையில் மிகவும் குறைவான சம்பளத்தை அளித்து ஊழியர்களை ஏமாற்றியுள்ளது.
அமெரிக்க ஊழியர்கள் அமைப்பு இதைக் கடந்த ஒரு மாதம் விசாரணையில் கண்டுபிடித்துள்ளது.
சம்பளம்
அமெரிக்க ஊழியர்கள் அமைப்பின் ஊதியம் மற்றும் வேலை நேரம் பிரிவு செய்த விசாரணையில் ஹெச்1பி விசா கீழ் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் தேவையில்லாத காரணங்களுக்கா சம்பளத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. இது அமெரிக்க ஊழியர் சட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.
அநியாயம்..
இப்படி இந்தியாவில் இருந்து பணியில் அமரத்தப்பட்ட ஊழியர்களுக்கு மாதம் 8,000 டாலர் சம்பளம் அளிப்பதாக உத்திரவாதம் கொடுத்த நிலையில், வெறும் 800 டாலர் மட்டுமே மாத சம்பளமாகக் கொடுத்துள்ளது.
8,000 டாலர் என்பது கிட்டத்தட்ட 5.5 லட்சம் ரூபாயாகும்.
இந்தியர்..
ஐடி சேவைகளை வழங்கி வரும் கிளவுட்விக் டெக்னாலஜிஸ், அமெரிக்க இந்தியரான மணி சபாரா தலைமையில் இயங்குகிறது. இந்நிறுவனம் தற்போது ஆப்பிள், காம்கேஸ்ட், வெரிசோன் மற்றும் விசா ஆகிய பெரும் நிறுவனங்களுக்குச் சேவையை அளித்து வருகிறது.
உத்தரவு
அமெரிக்க அரசு இந்நிறுவனத்தின் மீது அதன் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையான 1,73,044 அமெரிக்க டாலரை உடனடியாக அளிக்க உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications