இந்தியா முழுவதும் இருக்கும் டீமார்ட் கடைகளில் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிட்ட போது அதன் வளர்ச்சியை நாம் மறந்திருக்க முடியாது.
இந்நிறுவனம் தற்போது 2018ஆம் நிதியாண்டுக்கான 4வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மார்ச் காலாண்டு
2018ஆம் ஆண்டின் மார்ச் 31உடன் முடிந்த காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் 167 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த வருடத்தின் அதே காலகட்டத்தின் லாபத்தை ஒப்பிடுகையில் இது சுமார் 72.9 சதவீதம் அதிகமாகும்.
வருவாய்
இதேபோல் மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் 3,810 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற்றுள்ளது. இது கடந்த வருடத்தை விடிவும் 22.4 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
கணிப்பு
மார்ச் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் 178.5 கோடி ரூபாய் லாபம், 3,967 கோடி ரூபாய் வருவாய் பெறும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் லாபம் 167 கோடி ரூபாயும், 3,810 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.
14 கடைகள்
வென்யூ சூப்பர்மார்ட்ஸ் இந்தியா முழுவதும் சுமார் 155 கடைகளை வைத்து வர்த்தகம் செய்து வருகிறது. மார்ச் காலாண்டில் மட்டும் புதிதாக 14 கடைகளைத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications