முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா-விற்கு காதல் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி மற்றும்ஸ்லோக்கா மேத்தா ஆகியோரின் திருமணச் செய்தியின் அதிர்வுகளை அடங்குவதற்கு முன்பே மற்றொரு மகிழ்ச்சியானசெய்தி அம்பானி வீட்டில் நடந்துள்ளது.

ஆகாஷ் அம்பானியின் திருமணச் செய்தியை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா அம்பானிக்குத்திருமணம் உறுதியாகியுள்ளது. அதுவும் காதல் திருமணம்.

ஆனந்த் பிராமல்
 

ஆனந்த் பிராமல்

நாட்டின் மிகப்பெரிய பணக்காரரின் ஓரே மகளான ஈஷா அம்பானியிடம் ஆனந்த பிராமல் தனது காதலைமகாபலேஷ்வர் கோவில் கூறியுள்ளார். இதை எவ்விதமான தயக்கமும் இல்லாமல் உடனடியாக ஏற்றுள்ளார் ஈஷாஅம்பானி.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

இதனைக் கொண்டாடும் வகையில் ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல்யின் இரு குடும்பமும் இணைந்து மதியஉணவு சாப்பிட்டுள்ளனர்.

ஈஷாவின் காதலுக்கு எவ்விதமான மறுப்பும் தெரிவிக்காமல் முகேஷ் அம்பானி உடனே ஒப்புக்கொள்ள என்ன காரணம்.? யார் இந்த அனந்த் பிராமல்.

பிராமல் குரூப்

பிராமல் குரூப்

ஹெல்த்கேர் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனங்களுள் பிராமல் குரூப் ஒன்று. இந்நிறுவனம் தற்போது ஹெல்த்கேர், லைப் சையின்ஸ், மருந்து கண்டுப்பிடிப்பு, ஹெல்த்கேர் இன்பர்மேஷன் மேனேஜ்மென்ட், ஸ்பெஷாலிட்டி கிளாஸ்பேக்கிங், நிதியியல் சேவை, ரியல் எஸ்டேட் ஆகிய துறையில் சிறந்து விளங்குகிறது.

அஜய் பிராமல்
 

அஜய் பிராமல்

பிராமல் குரூப் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அஜய் பிராமல் 5.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சிறப்பானவர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் இக்குழுமத்தின் மொத்த வருமான அளவை 20 பில்லியன்டாலர் அளவிற்கு உயர்த்துவதே இவரின் இலக்காகவும் கொண்டுள்ளார்.

அஜய் பிராமல் மற்றும் ஸ்வாதி பிராமல் தம்பதிக்கு ஆனந்த் பிராமல், நந்தினி பிராமல் ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

ஆனந்த் பிராமல்

ஆனந்த் பிராமல்

நந்தினி பிராமல், பிராமல் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் நிலையில், ஆனந்த் பிராமல், பிராமல்குரூப்-இன் நிர்வாகத் தலைவராக உள்ளார், இதுமட்டும் அல்லாமல் பிராமல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின்தலைவராகவும் உள்ளாப் ஆனந்த்.

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

பிராமல் குரூப்-இல் சேருவதற்கு முன்பு ஆனந்த் பிராமல் இந்திய கிராமங்களில் தினமும் 40,000 பேருக்கு மருத்துச்சிகிச்சை அளிக்கும் வகையில் Piramal Swasthya என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் துவங்கினார்.

இக்காலகட்டத்தில் இந்திய வர்த்தகர்கள் அமைப்பின் இளைஞர்கள் வட்டத்தின் தலைவராகவும் ஆனந்த் பிராமல்இருந்துள்ளார்.

கல்வி

கல்வி

ஆனந் தனது பட்டப்படிப்பை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். அதேபோல் தனதுதந்தையைப் போலவே ஆனந்த் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

பிராமல் ரியல் எஸ்டேட்

பிராமல் ரியல் எஸ்டேட்

ஆனந்த் பிராமல் தலைமையில் பிராமல் ரியல் எஸ்டேட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால்மிகையாகாது. மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே சிறந்த அணியை உருவாக்கிப் பல திட்டங்களை முடித்துஅசத்தியுள்ளார்.

 முதலீடு

முதலீடு

இதுமட்டும் அல்லாமல் கோல்மேன் சாச்சஸ் மற்றும் வார்பர்க் பின்கஸ் நிறுவனங்களிடம் இருந்து சுமார் 434 மில்லியன்டாலர் அளவிலான முதலீட்டையும் தனது ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்காக 2015இல் திரட்டினார் ஆனந்த்.

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் இதுவரை திரட்டப்பட்ட முதலீட்டில் இதுவே அதிகமான தொகையாகும்.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

மேலும் 2018இல் ஹூரன் ரியல் எஸ்டேட் யூனிகார்ன் பட்டியலில் ஆனந்த் பிராமல்-க்கு விருது வழங்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

குறுஞ்செய்தி

குறுஞ்செய்தி

சமீபத்தில் ஆனந்த் பிராமல் கொடுத்த ஒரு பேட்டியில் முகேஷ் அம்பானி அவர்கள் கொடுத்த வார்த்தைகள் தான்என்னை வர்த்தகச் சந்தைக்கு இழுத்தது எனக் கூறினார். தற்போது முகேஷ் அம்பானி, ஆனந்த் பிராமல் அவர்களுக்குமாமனார் ஆகியுள்ளார்.

தற்போது ஆனந்த் பிராமல்க்கு 33 வயது ஆகும் நிலையில், ஈஷா அம்பானிக்கு 26 வயது மட்டுமே ஆகிறது.

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முக்கியநபராக உள்ளார். 2014இல் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏமுடித்த ஈஷா, சில வருடம் மெக்கென்சி அண்ட் கம்பெனியில் பணியாற்றிய பின்னர் ரிலையன்ஸ் நிர்வாகத்தில்சேர்ந்தார்.

வர்த்தக நோக்கம்..

வர்த்தக நோக்கம்..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகம் செய்யும் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறையில் பிராமல் குரூப் இருக்கிறது. இது தனது வர்த்தகத்தை விரிவாக்கவும், நாட்டின் அனைத்துத் துறையிலும் தனது ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதைமனத்தில் வைத்துக் கூட இந்தத் திருமணத்திற்கு முகேஷ் அம்பானி ஒப்புக்கொண்டு இருக்கலாம்.

அதேபோல் ஆகாஷ் அம்பானியின் மனைவியாகப் போகும் ஸ்லோக்கா மேத்தா குடும்பமும் முற்றிலும் மாறுபட்டதுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்லோக மேத்தா

ஸ்லோக மேத்தா

ஓரே நாளில் இந்தியா முழுவதும் டிரென்டான ஸ்லோக மேத்தா.. யார் இவர்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand piramal proposed to Isha ambani at a temple

Anand piramal proposed to Isha ambani at a temple
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?