ரஷ்யா, வளைகுடா உட்படக் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் இருக்கும் அனைத்துநாடுகளும் அதிகளவிலான வருவாய் மற்றும் வர்த்தகத்திற்காகச் செயற்கையாகக் கச்சா எண்ணெய் விலையைஉயர்த்தி வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச நாணய சந்தையில்அதிகமாகும் நிலையில் ரூபாய் மதிப்பு ஒரு வருட வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆகவே மே 15ஆம் தேதிக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரும்.. அதென்ன மே15ன்னு தானேகேட்கிறீர்கள்.. காரணம் இருக்கு.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அதிகளவில் உற்பத்திசெய்து சந்தைப்படுத்திய நிலையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 45 டாலர் வரையில் சரிந்தது.
இதனால் வளைகுடா நாடுகளின் வருமானம் அதிகளவில் சரிந்து மோசமான வர்த்தகச் சூழ்நிலையை அடைந்தது.
செயற்கை முறை..
இந்நிலையில் ரஷ்யா மற்றும் OPEC நாடுகள் இணைந்து ஆலோசனை செய்து கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைந்துசந்தையில் சேவையை அதிகரித்தனர். இதனால் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயரத் துவங்கியது.
வளர்ச்சி
ஜூன் மாதம் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 67 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து இன்றுஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 டாலர் என்ற 4 வருட உச்சத்தை அடைந்துள்ளது.
இன்றைய விலை..
இன்று கச்சா எண்ணெய் சந்தையில், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 70.28 டாலராகவும், பிரென்ட் கச்சாஎண்ணெய் 75.36 டாலராகவும், OPEC வலையில் இருக்கும் நாடுகளில் கச்சா எண்ணெய் விலை 70.66 டாலராகவும் உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இதேநேரத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்து 67.13 ரூபாய் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை..
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் அதிகளவிலான லாபத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தங்கம் விலையைப் போல் தினசரி விலை மாற்றத்தைக் கொண்டு வந்தது.
இதன் பின்னர்ச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைச் சில செண்டுகள் உயர்ந்தாலும், மத்திய அரசுக்குநிதி தேவை ஏற்பட்டாலும் உடனடியாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்தது.
விலை மாற்றம்
இப்படிப்பட்ட மத்திய அரசு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் வைத்துள்ளது. இதுவும்கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலர் என்ற அளவை அடைந்த போதிலும் விலை மாற்றத்தைஅறிவிக்கவில்லை.
என்ன காரணம்..?
மோடி தலைமையிலான பிஜேபி அரசின் ஆதிக்கம் இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கர்நாடகமாநிலத்தில் தற்போது பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பதற்காகமக்களின் ஆதரவைப் பெற மோடி அரசு ஏப்24 முதல் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல்வைத்துள்ளது.
கர்நாடக தேர்தல்..
மே 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது, இதன் முடிவுகளை மே15ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் மே15 அல்லது மே 14ஆம் தேதியே பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிகளவில் உயர்த்தலாம்.
பெட்ரோல் விலை
டெல்லி - 74.63 ரூபாய் (ஒரு லிட்டர்)
கொல்கத்தா -77.32 ரூபாய் (ஒரு லிட்டர்)
மும்பை - 82.48 ரூபாய் (ஒரு லிட்டர்)
சென்னை - 77.43 ரூபாய் (ஒரு லிட்டர்)
டீசல் விலை
டெல்லி - 65.93 ரூபாய் (ஒரு லிட்டர்)
கொல்கத்தா -68.63 ரூபாய் (ஒரு லிட்டர்)
மும்பை - 70.20 ரூபாய் (ஒரு லிட்டர்)
சென்னை - 69.56 ரூபாய் (ஒரு லிட்டர்)
கணிப்பு..
தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்பின் படி மே15க்குப் பின் ஒரு வார காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறைந்தபட்சம் 1 ரூபாய் முதல் 1.50 ரூபாய் வரையில் உயர வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications