ஏர்ஏசியா கோடைக்காலச் சலுகையாக வெளிநாட்டுப் பயணங்களை 3,999 ரூபாய் முதலும், உள்நாட்டுப் பயணங்களை 1,500 ரூபாய்க்கும் குறைவாகக் குறிப்பிட்ட வழித்தடங்களில் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
ஏர்ஏசியா வழங்கும் இந்தச் சலுகைகளை உள்நாடு மற்றும் வெளிநாடு என இரண்டு வகையான பயணங்களுக்கும் www.airasia.com என்ற இணையதளத்தின் கீழ் டிக்கெட்களைப் பெற முடியும்.
சலுகை காலம்
ஏர்ஏசியா வழங்கும் இந்தக் கோடைக்காலச் சலுகை டிக்கெட்களை 2018 மே 13-ம் தேதிக்குள் புக் செய்து 2018 அக்டோபர் 31 வரையிலான விமானப் பயணங்களைச் செய்யலாம் என்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு வழித்தட சலுகை
உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 1,399 ரூபாய் கட்டணம் செலுத்தி புவனேஸ்வர்-கொல்கத்தா, ராஞ்சி-கொல்கத்தா, கொச்சி-பெங்களூர், கொல்கத்தா-புவனேஸ்வர், ஹைதெராபாத்-பெங்களூர் மற்றும் பெங்களூரு-சென்னை பாதைகளில் பயணம் செய்யலாம்.
இதுவே 1,450 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் பெங்களூரு - கொச்சி இடையில் பயணம் செய்ய முடியும். மேல்ய்ம் விஷாகபட்டினம் - கொல்கத்தா மற்றும் பெங்களுரு - கொவா இடையில் விமானப் பயணம் செய்ய 1,699 ரூபாய் கட்டணம் ஆகும்.
வெளிநாட்டு வழித்தடங்கள்
புவனேஷவர் - கோலாலம்பூர் செல்ல ரூ.3,999, கோலாலம்பூர் வழியாகப் புவனேஷ்வர் - பூகெட் ரூ.4.871, பாங்காக் வழியாகக் கொச்சி - டான் மியூவாங் செல்ல 4,999 ரூபாய் என்றும், கோலாலம்பூர் வழியாகக் கொல்கத்தாவில் இருந்து சிட்னி செல்ல 15,373 எஊபாய் என்றும், கோலாலம்பூர் வழியாக ஜெய்ப்பூர் - பூகெட் செல்ல 7,358 ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ளனர்.
சீட்கள்
ஏர்ஏசியாவின் இந்தச் சலுகையில் அனைத்து சீட்களும் கிடைக்காது. குறைந்த அளவிலான சீட்கள் மட்டுமே ஒரு வழி பாதையில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கட்டணங்கள்
கிரெடிட், டெபிட் அல்லது பிற கார்டுகள் வழியாகக் கட்டணம் செலுத்தி இருந்தால் டிக்கெட்டினை ரத்து செய்யும் போது செயல்பாட்டுக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. டிக்கெட் கட்டணத்தில் விமான நிலைய வரியும் அடங்கும். புதிய டிக்கெட் வாங்க மட்டுமே இந்தச் சலுகை.


Click it and Unblock the Notifications