இந்திய டெக் நிறுவனங்கள் அதிகளவில் வருமானம் பெறுவது அமெரிக்கா வர்த்தகத்தின் வாயிலாக என்றாலும், இதற்குப் பெரிய அளவில் உதவி செய்வது ஹெச்1பி விசா தான். தற்போது அமெரிக்க அரசும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் ஹெச்1பி விசாவிற்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்தியர்கள் ஆதிக்கம்
2016ஆம் ஆண்டில் டெக் நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட விசாவில் இந்தியர்கள் மட்டும் சுமார் 74.2 சதவீத ஹெச்1பி விசாக்களைப் பெற்றுள்ளது. இது 2017ஆம் ஆண்டில் 75.6 சதவீதமாக உயர்ந்துள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் புதிதாக ஹெச்1பி விசா பெறுவோரின் எண்ணிக்கையில் இந்தியர்கள் மத்தியில் குறைந்துள்ளது.
சீனா
இந்தியர்களுக்கு அடுத்தபடியாகச் சீனர்களுக்கு 2016ஆம் ஆண்டில் அமெரிக்கா 9.3 சதவீதமும், 2017ஆம் ஆண்டில் 9.4 சதவீதம் அளவிலான ஹெச்1பி விசாவை அளித்துள்ளது.
USCIS அமைப்பு
அமெரிக்காவின் USCIS அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக ஹெச்1பி விசா பெறுவோரின் எண்ணிக்கை 2017இல் 4.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. அதேபோல் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு மறு ஒப்புதல் பெற்றோர் எண்ணிக்கையில் இந்தியர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
எண்ணிக்கை
2016இல் 70,737 இந்தியர்களுக்குப் புதிதாக ஹெச்1பி விசா அளிக்கப்பட்டு இருந்தது. இது 2017இல் 67,815 ஆகக் குறைந்தது.
மேலும் ஹெச்1பி விசா மறுஒப்புதல் பெற்றோர் எண்ணிக்கை 2016இல் 185,489ஆகவும், 2017இல் 2,08,608 ஆக உயர்ந்துள்ளது.
ஆக 2016இல் ஹெச்1பி விசா பெற்ற மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 2,56,226, 2017இல் 2,76,423 ஆகும்.


Click it and Unblock the Notifications