கடந்த 4 வருட ஆட்சயில் எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பதை உடனடியாகக் கணக்கிட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது அணிக்கு உத்தரவிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு இது முக்கியத் தகவலாக இருக்கும் நிலையில் மோடி இதன் தகவல்களை முன்கூடியே சேகரிக்கத் துவங்கியுள்ளார்.
உத்தரவு
மோடியின் உத்தரவின் படி, அனைத்து அமைச்சகங்களும், இந்த வருட காலத்தில் ஒப்புதல் அளித்த திட்டங்கள், நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை குறித்த தகவல்களை விரிவான முறையில் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜிடிபி
இதுமட்டும் அல்லாமல் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் மூலம் நாட்டின் மொத்த உள்ளாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபி அளவில் எந்த வகையிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதையும் கணிக்க வேண்டும் என அனைத்து அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்குறுதி..
மோடி ஆட்சிக்கு வரும் முன்பு ஒவ்வொரு வருடத்திற்கும் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார், இதை அவர் செய்துக்காட்டவில்லை என் அனைத்துத் தரப்புகளிலும் கருத்து நிலவி வரும் நிலையில்.
இதனைச் சமாளிக்கும் வகையிலும், 2019ஆம் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவான சூழ்நிலை அமைத்துத் தர வேண்டும் என்பதற்காகவே இந்தத் தகவலை திரட்ட உத்தரவிட்டுள்ளார்.
2014 வெற்றி..
வேலைவாய்ப்புகள் குறித்த கறையைப் பிஜேபி மீது இருந்து துடைத்துவிட்டால், 2014இல் பெற்ற வெற்றியை 2019 பொதுத் தேர்தலிலும் பெற முடியும் என்பதே மோடி அரசின் நம்பிக்கை.
பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications