இந்திய ஈகாமர்ஸ் சந்தைக்கு வித்திட்ட பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது மொத்தமாக அமெரிக்க ரீடைல் நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் கையில் செல்ல உள்ளது.
இதன் காரணமாகப் பிளிப்கார்ட்-இன் காட்பாதராக இருக்கும் இந்நிறுவன நிறுவனர் சச்சின் பன்சால் தன்னிடம் இருக்கும் பங்குகள் முழுவதையும் விற்பனை செய்து விட்டு முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளார்.
சச்சின் பன்சால்
பிளிப்கார்ட் நிறுவனத்தைச் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் இணைந்து துவங்கினர், இந்நிறுவனத்தில் நீண்ட காலம் சிஇஓவாக இருந்த சச்சின் பன்சால் நிர்வாகப் பிரச்சனையின் காரணமாகப் பிளிப்கார்ட் குழு நிறுவனங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதாவது பிளிப்கார்ட்-இன் பிளிப்கார்டின் நேரடி நிர்வாகப் பணியில் சச்சின் விலக்கி வைக்கப்பட்டார்.
வால்மார்ட்
இந்நிலையில் வால்மார்ட் இந்நிறுவனத்தின் பங்குகளை அதிகளவில் கைப்பற்ற திட்டமிட்டு சுமார் 15 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்யத் தயாராகியுள்ளது.
பங்கு விற்பனை
இத்தகைய சூழ்நிலையில் சச்சின் பன்சால் அவர்களிடம் இருக்கும் 5.5 சதவீத பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்து மொத்தமாக நிர்வாகத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளார் சச்சின்.
சாப்ட்பேங்க்
பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது 20 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், வால்மார்ட் சுமார் 60-70 சதவீத பங்குகளைக் கைப்பற்ற 12-15 பில்லியன் டாலரை முதலீடு செய்ய உள்ளது.
இந்நிலையில் வால்மார்ட் நிறுவனத்திற்கு அடுத்தாக அதிகப் பங்குகளை வைத்திருக்கப்போவது ஜப்பானின் சாப்ட்பேங்க் நிறுவனம் தான். தற்போது சாப்ட்பேங்க் நிறுவனம் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications