கர்நாடக தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் சிக்கிய 120 கோடி ரூபாய்..!

கர்நாடகாவில் வர இருக்கும் மே 12-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜனதா தல் கட்சிகள் இடையில் மிகப் பெரிய போட்டி நிலவி வருகிறது.

அதே நேரம் எல்லா மாநிலங்களையும் போன்று இங்கும் 120 கோடி ரூபாய் வரை தேர்தல் ஆணையம் பரிமுதல் செய்துள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பரிமுதல் செய்யப்பட்டவை

பரிமுதல் செய்யப்பட்டவை

ரொக்க பணம் மட்டும் 67.27 கோடி ரூபாயும், 23.36 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள், 43.17 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 18.57 கோடி ரூபாய் மதிப்பிலான குக்கர், புடவை, தையல் இயந்திடம், குட்கா, லேப்டாப் மற்றும் வாகனங்கள் போன்றவை பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 திருப்பி அளிக்கப்பட்டவை

திருப்பி அளிக்கப்பட்டவை

மொத்தமாக 152.78 கோடி ரூபாய் வரை பரிமுதல் செய்யப்பட்டதாகவும் அதில் 32.54 கோடி ரூபாய் ரொக்க பணத்திற்கு முறையான ஆவணங்கள் இருந்ததால் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

போதைப் பொருட்கள்

போதைப் பொருட்கள்

கர்நாடக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 39.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

யாரெல்லாம் பறிமுதலில் ஈடுபட்டனர்?

யாரெல்லாம் பறிமுதலில் ஈடுபட்டனர்?

தேர்தல் ஆணையக் கண்காணிப்புக் குழுக்கள், காவல் துறை, வருமான வரித் துறை போன்றவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கருப்புப் பணம் புழக்கம் உள்ளதா என்பதைக் கண்காணிக்க நடத்திய சோதனையில் இவ்வளவு பணம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேருந்துகள்

பேருந்துகள்

சென்ற வாரம் புதன் கிழமை மட்டும் தேவனஹல்லியில் இரண்டு தனியார் பேருந்துகளில் இருந்து காவல் துறை 62.70 லட்சம் ரூபாயினைக் காவல் துறை பரிமுதல் செய்துள்ளது. அதில் 52 லட்சம் ஆடைகளில் சுற்றியும், 10.70 லட்சம் ரூபாய் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட மூட்டைகள் வைக்கும் இடத்தில் இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்,

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+