இண்டிகோ விமானத்தில் செல்லும் பயணிகள் கொசு கடிக்கிறது என்று அளித்து வந்த தொடர் புகாரால் கொசு அடிக்க எலக்ட்ரானிக்ஸ் பேட் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
அன்மையில் இண்டிகோ விமானப் பயணி கொசு கடிக்கிறது என்று புகார் அளித்ததன் பேரில் இந்த முடிவினை விமான நிறுவனம் எடுத்துள்ளது.
கவலை வேண்டாம் பேட் உள்ளது
கொசு கடிக்கிறது என்று கவலைப்பட வேண்டாம் எலக்டாரின்க்ஸ் பேட் பயன்படுத்துங்கள் என்றும் இது கொசு மருந்து அடிப்பது மட்டும் இல்லாமல் அசௌகரியமாகக் கருதும் பயணிகள் இதனைப் பெற்றுப் பயன்படுத்தலாம் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேவைக்கு மட்டுமே
எலக்ட்ரானிக்ஸ் கொசு பேட்கள் எப்போதும் அளிக்கப்பட மாட்டாது என்றும் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே அளிக்கப்படும் என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது.
ஏன்?
லக்னோவிற்கு அன்மையில் பயணம் செய்து மருத்துவர் தன்னைக் கொசு கடித்ததாகவும் அதற்கு எந்த மாற்று வழியும் விமான நிறுவனத்தினால் அளிக்க முடியவில்லை என்று அளித்த புகாரின் பேரில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இண்டிகோ நிறுவனத்தினை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டதன் பேரில் இந்த முடிவினை இண்டிகோ நிறுவனம் எடுத்துள்ளது.
இண்டிகோ
இண்டிகோ நிறுவனம் இரண்டு முறை விமானங்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை 2 முறை அடித்தும் கொசு கடித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பயணிகளின் இருக்கை கீழ் கொசு விரட்டிகளையும் நாங்கள் பொருத்தியுள்ளோம். தற்போது பேட் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications