ஆப்பிள் தயாரிப்புகளை யாருக்குத் தான் பிடிக்காது, உலகின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளரான வாரன் பபெட்கூடத் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்து இந்நிறுவனப் பங்குகளை அதிகம் வைத்துள்ளவர்கள் பட்டியில்2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இப்படி ஆப்பிள் வலையில் பெரும் பெரும் பணக்காரர்கள் விழும் நிலையில், சாமானியர்கள் மட்டும் என்னவிதிவிலக்கா?
டெல்லி விமான நிலையம்
விமானப் போக்குவரத்தின் உளவுத்துறை பிரிவுக்கு வந்த தகவல்களை அடுத்து டெல்லி விமான நிலையத்தில்வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. கிடைத்த தகவல்கள் படியே 53வயது முதியவர் ஒருவர் ஐபோன்எக்ஸ் போன்களைக் கடத்தியுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐபோன்எக்ஸ்
உளவுத்துறை பிரிவின் சோதனையில் அந்த முதியவரிடம் சுமார் 100 ஐபோன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மதிப்பு சுமார் 85.61 லட்சம் ரூபாய் என விமான நிலையத்தின் சுங்க பிரிவு கூடுதல் ஆணையாளர் அமன்தீப் சிங்தெரிவித்துள்ளார்.
அதிகமான விலை
உலகில் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஐபோன் எக்ஸ் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில்64ஜிபி சேமிப்பு அளவு கொண்ட ஐபோன் எக்ஸ் 84,990 ரூபாயும், 256ஜிபி சேமிப்பு அளவு கொண்ட ஐபோன்எக்ஸ் 1,08,930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
என்ன காரணம்..?
பிற நாடுகளை விடவும் இந்தியாவில் அதிக விலைக்கு ஐபோன் எக்ஸ் விற்பனை செய்ய முக்கியமான காரணம்இறக்குமதி வரி தான்.
ஆப்பிளின் ஐபோன்எக்ஸ் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை என்றால் இந்தப் போன்கள் வெளிநாட்டில்இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக நுகர்வோர் கைகளுக்குச் செல்லும் போது அதிகப்படியானஇறக்குமதி வரியுடன் விற்பனை செய்கிறது ஆப்பிள்.
வாரன்டி
இந்நிலையில் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டு, கடந்த வருடம்முதல் ஐபோன்களுக்கு உலகளாவிய வாரன்டி அளிக்க முடிவு செய்தது.
இதன் வாயிலாக வெளிநாட்டில் இருந்து ஐபோன்கள் இந்தியாவிற்கு அதிகளவில் கொண்டு வரப்படுகிறது.
விலை வித்தியாசம்..
துபாயில் ஐபோன்எக்ஸ் 4,965 திராஹம் மட்டுமே, இது இந்திய ரூபாய் மதிப்பில் 78,294 ரூபாய் மட்டுமே. இந்த விலைவித்தியாசமே வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அதிகளவில் ஐபோன்களை இந்தியாவிற்கு வாங்கி வரத்துவங்கியுள்ளனர்.
சில நேரங்களில் இந்த முதியவர் போல ஐபோன்களைக் கடத்தவும் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications