அமெரிக்க ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்-ஐ வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் அதனை ஜப்பானின் சாப்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான மஸயோஷியின் மகன் புதன் கிழமை உறுதி செய்துள்ளார்.

வால்மார்ட் - பிளிப்கார்ட் இடையிலான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக முடிவுற்றதாகவும், சாப்ட் பாங்க் இந்திய ஆன்லைன் சந்தையில் முதலீடு செய்வது இரட்டிப்பாகப் போகிறது என்றும் மஸயோஷியின் மகன் ஜப்பான் டைம் இதழுக்கு உறுதி செய்துள்ளார்.
நமக்குக் கிடைத்த தகவலின் படி சாப்ட் பாங்க் பிளிப்கார்ட்டில் தங்கள் வசம் வைத்துள்ள மொத்த பங்குகளையும் வால்மார்ட்டுக்கு விற்கப் போவதாக இருந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் மொத்தமாகத் தன் வசம் பிளிப்கார்ட்டில் இருந்து பங்குகளை வால்மார்ட்டிற்கு விற்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications