வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லாத வணிக அழைப்புகள் செய்தது மற்றும் தொல்லை தரும் எஸ்எம்எஸ் அனுப்பியது என டெலிகாம் நிறுவனங்கள் மீது 2.81 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதித்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
2017-ம் ஆண்டில் மட்டும் சேவை தர விதிமுறைகளின் இணக்கமின்மை மற்றும் சேவை தரத்தின் இணக்க அறிக்கைகளைத் தாமதமாகச் சமர்ப்பித்த காரணங்களுக்காக டெலிகாம் நிறுவனங்கள் மீது 50 உத்தரவுகளை இட்டதாகவும் 4.7 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் 2ஜி, 3ஜி, பிராட்பேண்ட் சேவை மற்றும் அடிப்படை சேவைகளுக்காக என்றும் டிராய் தெரிவித்துள்ளது.
பிராட்பேண்ட் சேவை
பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுக்கு 2017-ம் ஆண்டு 32 நோட்டிஸ்கள் தரம் குறைவாக இருக்கிறது என்ற காரணங்களுக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.
2ஜி & 3ஜி
இதே போன்று தரமான சேவை வழங்கவில்லை என்று 2ஜி சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு 33 நோட்டிஸ் மற்றும் 3ஜி சேவை வழங்குநர்களுக்கு 14 நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேவையில்லாத அழைப்புகள்
தேவையில்லாத அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்த காரணங்களுக்காக 2017-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மற்றும் நவம்பர் மாதத்தில் 26 உத்தரவுகள் பிறப்பித்து 281.645 லட்சம் ரூபாய் டெலிகாம் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள்
இந்தக் காரணங்களைக் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டிஸ் பெரும்பாலும் பார்தி ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தான் என்றும் தெரியவந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications