2015ஆம் ஆண்டில் ஈரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து தற்போது அமெரிக்க வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாகத் தற்போது வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஈரான்
அனுமதி இல்லாமல் ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிப்பதாகக் கூறி யுனைடெட் நேஷன்ஸ் செக்யூரிட்சி கவுன்சில் அமைப்பில் இருக்கும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது.
ஒப்பந்தம்
இதன் பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு ஈரான் மற்றும் யுனைடெட் நேஷன்ஸ் செக்யூரிட்சி கவுன்சில் நாடுகளுடன் 2 வருடம் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள், அனுமதிகளுடன் Joint Comprehensive Plan of Action (JCPOA) என்ற ஒப்பந்தம் இரு தரப்புகள் மத்தியில் செய்யப்பட்டது.
இதைத் தான் ஈரான் அணு ஒப்பந்தம் எனக் கூறப்படுகிறது.
முக்கியமான விஷயம்
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஈரான் புளூடானியம் மற்றும் யுரேனியம் ஆகிய இரு அணுசக்தி பொருட்களைப் பயன்படுத்த அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதித்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதத்தை இந்த இரண்டு தாதுகளை வைத்துத் தான் உருவாக்க முடியும்.
ஆய்வுகள்
ஈரான் மீதனா பொருளாதாரத் தடையை நீக்கி, அணுஆயுதங்களைத் தயாரிக்கிறதா, அணுசக்தி வாய்ந்த பொருட்களை வைத்துள்ளதா என்பதை ஈரான் நாட்டில் பிற நாடுகள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் எனப் பல கட்டுப்பாடுகளுடன் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
2015இல் ஒப்பந்தம்
2015ஆம் ஆண்டு ஈரான் மற்றும் 6 சக்திவாய்ந்த நாடுகளுடன் JCPOA ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் பின் ஈரான் மீது இருந்த பொருளாதாரத் தடையை நீங்கியது. பல வருடங்களாகப் பொருளாதாரத் தடையால் நிதியில்லாமல் தவித்த ஈரான் தடை நீங்கிய உடனேயே அதிகளவிலான கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து விற்பனை செய்யத் துவங்கியது.
ஈரானுக்குப் போட்டியாகப் பிற வளைகுடா நாடுகளும் கச்சா எண்ணெய்யை அதிகளவில் உற்பத்தி செய்தது.
அமெரிக்கா வெளியேற்றம்..
இந்த முக்கியமான ஒப்பந்தத்தில் இருந்து தான் தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது டிரம்ப் அரசு.
JCPOA ஒப்பந்தம் செய்யப்பட்டுச் சுமார் 3 வருடங்கள் ஆன பின்பு அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் ஓபாமா ஆட்சியில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்
அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து எதிர்ந்து வரும் டிரம்ப் அரசு, தற்போது மிகமுக்கியமான அணு ஒப்பந்தத்தையும் எதிர்த்துள்ளது.
இதனால் சக்திவாய்ந்த நாடுகள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகும் என்று அச்சமும் எழுகிறது.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!



Click it and Unblock the Notifications