அமெரிக்கா ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் சீனாவில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த பின்பு இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கியது. சீன சந்தையில் அலிபாபா உடனான போட்டியில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி அமேசானுக்குப் பல முக்கியப் படத்தை அளித்து.
அதில் ஒன்றுதான் இந்தியாவில் தற்போது செய்து வரும் தொடர் அதிரடி முதலீடுகள்.
அமேசான் இந்தியா
2013ஆம் ஆண்டில் அமேசான் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்குகிறது. சீனாவில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாகப் பொறுமையாகச் செயல்படாமல் ஆரம்பம் முதலே அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான பணிகளில் அமேசான் இறங்கியது.
இதுமட்டும் அல்லாமல் ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ச்சி பெற்ற சந்தையாக இந்தியா இல்லை என ஆரம்பகட்டத்திலேயே புரிந்துகொண்ட அமேசான் இந்திய மக்களின் முறைக்குத் தனது வர்த்தகத்தை மாற்றியது.
பிளிப்கார்ட்
இவை அனைத்தையும் வேகமாகச் செய்ய அமேசானுக்கு 2013 காலகட்டத்தில் இருந்த ஓரே வாய்ப்பு, பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்குவது தான்.
ஆகவே பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்க முடிவு செய்ய அமேசான் இதுவரை 3 முறை முயற்சி செய்து தோல்வியை அடைந்துள்ளது.
முதல் முறை..
இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கும் முன் அமேசான் பிளிப்கார்ட் நிறுவனத்தை 500-700 மில்லியன் டாலருக்கு வாங்குவதாக விருப்பப்படுவதாக அறிவித்தது. ஆனால் பிளிப்கார்ட் இது மிகவும் குறைந்த தொகை என அறிவித்து நிராகரிப்பு செய்யதது.
அதன் பின் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்து தனது வர்த்தகத்தைக் கொண்டு வந்தது.
2வது முறை..
2015இல் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் மத்தியில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் போராட்டம் மிகப்பெரியதாக வெடித்தது. இதில் இரு நிறுவனங்களுமே அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்து. இக்காலக்கட்டத்தில் அமேசான் பிளிப்கார்ட் நிறுவனத்தை 8 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக அறிவித்தது.
மீண்டும் பிளிப்கார்ட் நிராகரித்தது.
3வது முறை..
பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இந்நிறுவனத்தைக் கைப்பற்ற 22.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கைப்பற்ற தயார் என அமேசான் அறிவித்தும், வால்மார்டின் 20 பில்லியன் டாலர் மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் 3வது முறையாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை அமேசான் இழந்தது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications