பிரிட்டன் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பிரிட்டிஷ் டெலிகாம் கணக்கியல் முறைகேடுகள் மற்றும் வர்த்தகத் தொய்வில் இருந்து மீண்டு வர சுமார் 13,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதனால் உலகம் முழுவதும் இருக்கும் பிடி (BT) நிறுவன ஊழியர்கள் அச்சத்தில் உள்ளது.
முக்கிய முடிவு
பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனம் பிடி (BT) என அழைக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் தற்போது அதிகளவிலான நிர்வாகம் மற்றும் வர்த்தகப் பிரச்சனை இருந்து வரும் நிலையில், இதனைச் சமாளிக்கக் கண்டிப்பாக முக்கிய நடவடிக்கை எடுத்து செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற முடிவில் இறங்கியுள்ளது பிடி (BT).
கேவின் பேட்டர்சன்
இந்நிலையில் பிடி (BT) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கேவின் பேட்டர்சன் கூறுகையில், பங்குதாரர்களுக்கு நிலையான ஈவுத்தொகையும், புதிய பென்ஷன் திட்டத்திறாக நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், இதை நிர்வாகத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் கொண்டுவர வேண்டும் என்றால் 3 வருடம் ஆகும்.
இதேபோல் தற்போது பிடி (BT) பங்கு மதிப்பு 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
வருவாய்
அதேபோல் நடப்பு நிதியாண்டில் வருவாய் மற்றும் லாபம் குறைவாகத் தான் இருக்கும், அதேபோல் 4வது காலாண்டில் ஏற்படும் வருவாய் சரிவை ஈடு செய்யவும், நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கேவின்.
பற்றாக்குறை
ஊழியர்கள் பணிநீக்கம் மூலம் பிடி (BT) நிறுவனத்தில் ஏற்பட உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் EE நிறுவனத்தின் மூலம் ஈடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
EE நிறுவனத்தில் இருந்து 6,000 ஊழியர்கள் இன்ஜினியர் மூலம் பிடி (BT) தனது வாடிக்கையாளர் சேவை மற்றும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
13,000 ஊழியர்கள்
இந்நிலையில் பிடி (BT) நிறுவனத்தின் உலகளாவிய நிறுவனத்தில் இருந்து சுமார் 13,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது,
இந்தியாவில்
பிடி (BT) நிறுவனம் இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் அலுவலகங்களை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications