புதிய ஐடிஆர் 1 படிவம் மூலம் தனிநபர்கள் வருமான வரி செலுத்துவதற்காகச் சென்ற அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ள நிலையில் 2018-2019 மதிப்பீட்டு ஆண்டிற்கான வணிகர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் வருமான வரி செலுத்துவதற்கான ஐடிஆர் 5 படிவத்தினை மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.
சுகம் என்று அழைக்கப்படும் ஐடிஆர் 4 படிவத்தினை வணிகர்கள் மற்றும் தொழில் செய்யும் தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் 2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியினை 1961, வருமான வரி சட்டப் பிரிவுகள் 44AD, 44ADA, மற்றும் 44AE கீழ் செலுத்தலாம்.
யாரெல்லாம் ஐடிஆர் 4-ன் கீழ் வரியைத் தாக்கல் செய்ய வேண்டும்?
ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ள வணிகர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் ஐடிஆர் 4-ன் கீழ் வருமான வரியைத் தக்கல் செய்யலாம். தொழில் இல்லாத வணிகம் மூலம் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வாரை வருமானம் ஈட்டும் வணிகர்களும் இதில் அடங்குவர். 10-க்கும் குறைவான வணிக வாகனங்களை நிர்வகிக்கும் வணிகர்களும் ஐடிஆர் 4 படிவத்தின் கீழ் வருமான வரியைப் பிரிவு 44AE கீழ் வரியைத் தாக்கல் செய்யலாம்.
ஐடிஆர் 4 படிவத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
ஐடிஆர் 4-ல் மாற்றங்கள் செய்வது என்பது ஒன்றும் புதிதல்ல. 2015-2016 நிதி ஆண்டு வரை ஐடிஆர் படிவம் 4எஸ் ஆக இருந்ததைப் பல மாற்றங்களுடன் 2016-2017 நிதி ஆண்டில் ஐடிஆர் 4 ஆகப் பெயர் மாற்றம் செய்தனர். அதே போன்று 2017-2018 நிதி ஆண்டுக்கான படிவத்தையும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது ஆனால் பெயர் அதே தான். புதிய ஐடிஆர் 4 படிவத்தில் ஜிஎஸ்டி எண், ஜிஎஸ்டி தாக்கல் செய்ததில் உள்ள படி வணிக வருவாய் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். இதனைப் பார்க்கும் போது வருமான வரித் துறை வரி தாக்கல் செய்வதற்கான விவரங்களைக் கூடுதலாகப் பெறுவது தெரிகிறது.
மத்திய நேரடி வரி வாரியத்தின் பத்திரிக்கை வெளியீடு
சென்ற ஏப்ரல் மாதம் மத்திய நேரடி வரி வாரியம் பத்திரிக்கை வெளியீடு ஒன்றைச் செய்தது. அதில் வருமான வரி தாக்கல் செய்யும் வழிமுறைகளில் மாற்றம் இல்லை. படிவங்களில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஐடிஆர் படிவங்களையும் மின்னணு முறையில் தாக்கல் செய்ய முடியும். ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 படிவத்தினைப் பேப்பராகத் தாக்கல் செய்ய விரும்புபவர்கள் பின் வரும் விதிகளுக்குக் கட்டுப்படுவதானால் மட்டும் செய்க என்றும் தெரிவித்து இருந்தது.
அ) வருமான வரி தாக்கல் செய்ய உள்ள தனிநபர் வயது 80 அல்லது அதற்கும் கூடுதல். அல்லது
ஆ) தனிநபர் அல்லது இந்து கூட்டு குடும்பத்தின் ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக உள்ள போது ஐடிஆர் 1 மற்றும் 4-ஐ தாக்கல் தபால் மூலம் தாக்கல் செய்யலாம்.
ஒரு பக்க ஐடிஆர் 1 படிவம்
2018 ஏப்ரல் 14-ம் தேதி ஒரு பக்க ஐடிஆர் 1 படிவத்தினை வருமான வரித் துறை அறிமுகம் செய்தது. ஐடிஆர் 1 படிவத்தினை இந்திய குடியுரிமை பெற்ற தனிநபர்கள் மட்டும் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ள போது வரி தாக்கல் செய்யலாம். மேலும் ஐடிஆர் 1 படிவத்தில் சம்பள வடிவமைப்பின் படி குறிப்பிடும் படியும் மாற்றம் செய்துள்ளது. 2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியை 2018 ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications