கடந்த 4 நாட்களாக முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கும் ஆனந்த் பரிமால் நிச்சயதார்த்தம் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள் இந்திய இணைய உலகை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அவரது சொத்துக்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஈஷா அம்பானி முகேஷ் அம்பானியின் மகள் என்று மட்டும் நம்முல் பலருக்கும் தெரியும். ஆனால் ஈஷா மற்றும் ஆகாஷ் அம்பானி இருவரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்.
பிஸ்னஸ் வுமன்
ஈஷா அம்பானி ஆசிய பெண்கள் வணிகர்களில் 12-ம் இடத்தில் உள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரரின் மகளாக இவர் இருந்தாலும் இவருக்கான தனி வர்த்தகங்களும் உள்ளன.
சொத்து மதிப்பு
ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குனராக ஈஷா அம்பானி உள்ள நிலையில் இவரது தனிப்பட்ட மொத்த சொத்து மதிப்பு 4,710 கோடி ரூபாய் ஆகும்.
படிப்பு
1991-ம் ஆண்உ பிறந்த ஈஷா அம்பானி திருபாய் அம்பானி இண்டர்னேஷனல் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பிறகு யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்பு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.
ஜியோ
ஜியோவின் போர்டு உறுப்பினராக 2014-ம் ஆண்டுச் சேர்ந்த ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தினை நிர்வகித்து வருகிறார். 2015-ம் ஆண்டு முதல் ஜியோ வணிகத்தினை ஈஷா கவனித்து வருகிறார். ஷாருக்கான் இதன் விளம்பர தூதுவராக உள்ளார்.
வேலை
மெக்கின்சே & கம்பெனி நிறுவனத்தில் பிஸ்னஸ் அனலிஸ்ட் ஆகப் பணிபுரிந்த அனுபவம் ஈஷா அம்பானிக்கு உள்ளது.
ஃபோர்ப்ஸ் பட்டியல்
தற்போது 26 வயது ஆன ஈஷா அம்பானி 2008-ம் ஆண்டே இளமையான ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
பிற வணிகங்கள்
2016-ம் ஆண்டு லாக்மி பேஷன் வீக்கில் ஏஜியோ எனப்படும் ஆன்லைன் பேஷன் ரீடெய்ல் நிறுவனத்தினைத் துவங்கினார்.
திருமணம்
ஈஷா - ஆனந்த் பரிமால் இடையிலான திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் ஆவர். இதே பொன்று ஈஷா அம்பானியின் தம்பி ஆகாஷ் அம்பானிக்கும் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஷோல்கா மேஹ்தாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications