பிளிப்கார்ட்-வால்மார்ட் டீல்.. இந்திய இளைஞர்கள், விவசாயிகள் & வணிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

அமெரிக்காவின் மிகப் ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் 16 பில்லியன் டாலர் கொடுத்து இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீதம் வரையிலான பங்குகளை வாங்கியுள்ள நிலையில் வல்லுனர்கள் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்றும், புதிய வேலை வாய்ப்புகள் அதிகளவில் உறுவாஅகும் என்றும் மேக் இந்தியா கீழ் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்றும் அவை இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பயனை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வேலை வாய்ப்புகள்

வேலை வாய்ப்புகள்

விநியோக சங்கிலிகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் போன்றவற்றில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக வால்மார்ட் கூறியுள்ளது. மேலும் இந்தியாவில் தாங்கள் செய்ய உள்ள முதலீடுகளின் கீழ் புதிய நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் மறைமுக வேளை வாய்ப்புகள் எப்போது மற்றும் எவ்வளவு உருவாகும் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவுகளையும் தெரிவிக்கவில்லை.

 

சிறு வணிகர்கள்

சிறு வணிகர்கள்

பிளிகார்ட் நிறுவனத்துடன் இணைந்து வால்மார்ட் செயல்பட உள்ளதால் அது சிறு வணிகர்களிடம் இருந்து நேரடியாகப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் ஒரு திட்டமாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு வணிகத்தில் அதிகளவில் கவனம் செலுத்தி அதில் விவசாயிகளுக்குப் பெரும் அளவில் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் வால்மார்ட் கூறியுள்ளது. அதிலும் நாடு முழுவதும் குளிர்சாதன வசதியுடன் சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல், கெட்டுப்போகக் கூடிய வேளாண் விளைபொருட்களின் கழிவுகளைச் சரிபார்க்கவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

உள்ளூர் மளிகை கடைகள்

உள்ளூர் மளிகை கடைகள்

உள்ளூர் மளிகை கடைகளுடன் இணைந்து அவர்களை டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் பொருட்கள் விற்பனை செய்ய ஊக்குவித்து உதவும் என்று வால்மார்ட் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழும் பல முக்கிய முதலீடுகளைப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக வாலமார்ட் தெரிவித்துள்ளது.

தனித்தனியாகச் செயல்பட வாய்ப்பு

தனித்தனியாகச் செயல்பட வாய்ப்பு

பிளிப்கார்ட் - வால்மார்ட் இடையிலான இந்த ஒப்பந்தம் முழுமையாக முடிந்த பிறகு தனித்தனி பிராண்டு மற்றும் செயல்பாட்டு வடிவங்களுடன் செயல்பட இருப்பதாகவும் அதற்காக 2 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 சச்சின் பன்சால்

சச்சின் பன்சால்

பிளிப்கார்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் தன் வசம் இருந்து 5.2 சதவீத பங்குகளை 1 பில்லியன் டாலருக்கு வால்மார்ட் நிறுவனத்திடம் விற்றுள்ள நிலையில், 5.1 சதவீத பங்குகளை வைத்துள்ள பின்னி பன்சால் பிளிப்கார்ட்டின் போர்டு உறுப்பினராக அப்படியே நீட்டிக்கிறார்.

சாப்ட்பாங்க்

சாப்ட்பாங்க்

பின்னி பன்சால் போன்றே சென்ற வருடம் பிள்ப்கார்ட் நிறுவனத்தில் 2.5 பில்லியன் டாலர் முதலீட்டுடன் 20.8 சதவீத பங்குகளை வாங்கிய ஜப்பானின் சாப்ட்பாங்க்-ம் பங்குகளை விற்கவில்லை.

 பிற பங்குதாரர்கள்

பிற பங்குதாரர்கள்

பிற பங்குதாரர்களான டென்னெண்ட் ஹோல்டிங்ஸ், டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், நாஸ்பர்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் கார்ப் தங்கள் வசம் இருந்த பெரும்பாலான பங்குகளை வால்மார்ட்டுக்கு அளித்துவிட்டுத் தொடர்ந்து வால்மார்ட்டுன் செயல்பட முடிவு செய்துள்ளனர். இந்த ஒப்பந்தம் தற்போது ஒழுங்குமுறை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

முதலீட்டு ஆதாய வரி

முதலீட்டு ஆதாய வரி

மேலும் இந்த விற்பனையின் மூலமாக வரும் தொகையில் நிறுவனர்களான சச்சின் மற்றும் பின்னி இருவரும் 20 சதவீதத்தினை முதலீட்டு ஆதாயங்களுக்கான வரியாகச் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

வால்மார்ட்

வால்மார்ட்

வால்மார்ட் இந்திய சந்தையில் மிகப் பெரிய அளவில் கால் ஊன்றியுள்ள நிலையில் விவசாயம், உணவு மற்றும் ரீடெய்ல் ஆகிய துறைகளின் கீழ் இந்திய பொருளாதாரத்தினை வளர்ச்சி அடையைச் செய்ய உதவும் என்றும் எதிர்காலத்தில் வால்மார்ட் செய்ய இருக்கும் முதலீடுகள் இந்தியாவின் தேசிய அளவிலான முன்முயற்சிகளுக்கு அதாரவு அளிக்கும் மற்றும் நாட்டிற்கு நிலையாக நலன்களைக் கொண்டு வரும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+