நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியேறுகிறார்.
இந்நிலையில் இவ்வங்கிக்கான புதிய தலைவரைத் தேடும் பணியில் துவங்கியுள்ளது.
18 மாதம்
ஆதித்யா பூரி வெளியேற நீண்ட காலம் இருக்கும் நிலையில் எச்டிஎப்சி நிர்வாகம் மிகவும் முன்கூடியே அடுத்தச் சிஇஓ-க்கான தேடுதல் பணியைத் துவங்கியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் அடுத்த 18 மாதத்தில் புதிய சிஇஓ அதிகாரியைத் தேர்வு செய்ய எச்டிஎப்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
12 மாதம்
இதன் மூலம் தேர்வு செய்யப்படும் புதிய அதிகாரி குறைந்தபட்சம் 12 மாதம் ஆதித்யா பூரி உடன் பணியாற்ற முடியும். இதன் மூலம் நிர்வாகம் குறித்து முழுமையான புரிதல் தேர்வு செய்யப்படும் அதிகாரிக்குக் கிடைக்கும்.
எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கியின் சிஇஓவாக இருக்கும் ஆதித்யா பூரி அவர்களுக்குச் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு 70 வயது ஆகும் காரணத்திற்காக வருகிற 2020ஆம் ஆண்டு ஓய்வு பெறுகிறார்.
வளர்ச்சி
ஆதித்யா பூரி தலைமையில் எச்டிஎப்சி வங்கியின் சொத்து மதிப்பு 9.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த 10 வருடத்தில் 633 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மொத்த வராக்கடன் அளவு 0.44 சதவீதமாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் எச்டிஎப்சி வங்கியின் P-B ratio (புத்தக விலைக்கும் சந்தை விலைக்குமான வித்தியாசம்) 5.21 மடங்காக உள்ளது.
போட்டியாளர்கள்
இந்நிலையில் ஆதித்யா பூரி பதவிக்கு இவ்வங்கியில் இருக்கும் 3 முக்கிய அதிகாரிகள் போட்டி போடுகின்றனர்.
பிரேஷ் சுதாகரன் (54) துணை நிர்வாக இயக்குனர்
கைய்செத் பரூச்சா (52) நிர்வாக இயக்குனர்
ஆஷிஷ் பார்த்தசாரதி (50) கருவூல தலைவர்
4 தனியார் வங்கிகள்
இந்திய வங்கித்துறையில் தனியார் வங்கிகளுக்கு மிகப்பெரிய ஆதிக்கம் உள்ளதை நாம் மறுக்க முடியாது, அதில் குறிப்பாக எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை பெரிய அளவிலான பங்கீட்டை கொண்டுள்ளது.
அப்படி ஆதிக்கம் நிறைந்த 4 தனியார் வங்கிகளின் தலைமை மாற உள்ளது.
வெளியாட்கள்
இந்த 4 வங்கிகளின் தலைவர்கள் வெளியேறும் நிலையில், அப்பதவிக்குப் போட்டி போடும் அதே வங்கி அதிகாரிகளைத் தாண்டி இந்தப் பதவிக்கு வங்கிக்கு வெளியிலும் சில அதிகாரிகள் தகுதியாக உள்ளார். இவர்களில் சில உங்கள் கவனத்திற்கு
சியாம் ஸ்ரீநிவாசன் - பெடரல் வங்கியின் சிஇஓ
முரளி நட்ராஜன் - டிசிபி வங்கியின் சிஇஓ
பாலாஜி சுவாமிநாதன் - வெஸ்ட்பேக் வங்கி நிர்வாகத் தலைவர்
பிராமிட் ஜவேரி - சிட்டிவங்கி சிஇஓ
ராஜீவ் சபர்வால் - டாடா கேபிடல் சிஇஓ
சன்யோய் சட்டர்ஜி - கோல்டு மேன் சாச்சஸ் இந்தியா தலைவர்
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications