இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகள் நீட்டா அம்பானியின் மகளுமான ஈஷா அம்பானியின் நிச்சயதார்த்த விழா திங்கட்கிழமை நடைபெற்றது அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், ரன்பீர் கபூர், ஆமிர் கான், கரன் ஜோஹர், அயன் முகர்ஜி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியும் அவரது மனைவியுடன் வந்து கலந்துகொண்டார். மகளின் நிச்சயதார்த்த விழாவில் நீட்டா அம்பானி நடனம் ஆடிய வீடியோ இணையதளங்களில் டிரெண்ட் ஆன நிலையில் தற்போது முகேஷ் அம்பானி தனது மகள் ஈஷா அம்பானியுடன் நடனம் ஆடும் காட்சியும் வெளியாகியுள்ளது.