பிளிப்கார்ட்-வால்மார்ட் டீல் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், பிளிப்கார்ட் ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. வால்மார்ட் இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டை 16 பில்லியன் டாலர்கள் அளித்து வாங்கியுள்ள நிலையில் ஊழியர்களிடம் உள்ள பங்குகளையும் வாங்க முடிவு செய்துள்ளது.
ஒரு பங்கு 10,000 ரூபாய்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால் ஊழியர்கள் வசம் உள்ள 100 சதவீத பங்குகளையும் வால்மார்ட் வாங்க முடியும் செய்துள்ளதாகவும் ஒரு பங்குக்கு 10,000 ரூபாய் வரை அளிக்க உள்ளதாகவும் இதற்காக 2 பில்லியன் டாலரினை வால்மார்ட் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் கையகப்படுத்தல் நடவடிக்கை
உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவன கையகப்படுத்தல் நடவடிக்கை இது என்று கூறி வரும் நிலையில் பிளிப்கார்ட் நிறுவனப் பங்குகளை வைத்துள்ள முன்னாள் மற்றும் நடப்பு ஊழியர்களுக்கு லட்ச கணக்கில் பணம் வர இருக்கிறது.
எவ்வளவு ஊழியர்கள்
வால்மார்ட் பிளிப்கார்ட் ஊழியர்கள் பங்குகளுக்கு 1 மில்லியன் டாலர் வரை அளிக்க உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்ற நிலையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் பயன் அடைய உள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சச்சின் பன்சால்
சச்சின் பன்சால் வெளியேறுவது குறித்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ள பின்னி பன்சால் "கடந்த 11 ஆண்டுகளில் பிளிப்கார்ட் இந்தியாவின் நம்பர் 1 இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்து இருப்பதற்குச் சச்சினின் கனவும், தலைமை பன்பும் இல்லை என்றால் சாத்தியம் இல்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.
சச்சின் பன்சாலும் பிளிப்கார்ட் நிறுவனத்தினை விட்டு வெளியேறுவதற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை
வியப்பளிக்கும் வகையில் வால்மார்ட் வெளியிட்ட அறிவிப்பில் இணை நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் பெயர்களை எங்கும் குறிப்பிடவில்லை. இதனால் வால்மார்ட் போர்டில் ஒரு நிறுவனர் மட்டுமே இருந்தாரா என்பது பற்றி விவாத பொருளாகியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications