தற்போது நாட்டில் பரபரப்பாகப் பேசப்படுவது ஐபிஎல் போட்டிகளைப் பற்றித் தான். இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடி வருகின்றனர், ஒவ்வொரு அணியிலும் 19 முதல் 25 வீரர்களை ஏலம் எடுத்துள்ளார்.
ஐபிஎல் விளையாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் முன்பு ஒரு அணிக்கு 80 கோடி ரூபாய் எனப் பட்ஜெட் ஒதுக்கப்படும் அதை வைத்துத்தான் அனைத்து வீரர்களையும் ஏலம் எடுக்க வேண்டும். இப்படி எந்தெந்த அணிகள் எவ்வளவு செலவு செய்திருக்கிறது? யார் சிறப்பான முறையில் முதலீடு செய்து வலுவான அணியை உருவாக்கியுள்ளது..?
ஏலம்
இதை ஏலம் என்று பார்க்காமல் முதலீடாக நீங்கள் பார்க்கலாம். கொடுத்துள்ள பணத்தைச் சிறப்பான முறையில் முதலீடு செய்து எப்படி ஒரு வலுவான அணியை உருவாக்குவதிற்கு இணையாக, கையில் உள்ள பணத்தை எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு உக்திக்கு இணையானது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இந்த அணியில் தான் மிகவும் குறைந்த வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர், மொத்தமே 19 வீரர்கள் தான். இந்த அணியைப் பொறுத்தவரை 80 கோடியையும் செலவுசெய்துவிட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-க்குத் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் சுனில் நரேன் (ரூ. 12.5 கோடி). தற்போது கொல்கத்தா புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
கிங்ஸ் XI பஞ்சாப்
இந்த அணியில் மொத்தம் 21 வீரர்கள் உள்ளனர். கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்குக் கொடுக்கப்பட்ட 80 கோடியில் சுமார் 10 லட்சம் அளவிலான தொகையைச் சேமித்துள்ளது. ரவிச்சந்திரன் அஷ்வின், இந்த அணியின் கேப்டன் ஆவர். அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் அக்சர் பட்டேல் (ரூ. 12.5 கோடி). தற்போது கிங்ஸ் XI பஞ்சாப் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இந்த அணியில் மொத்தம் 24 வீரர்கள் ஏலம் எடுத்து உள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது. அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இவருக்குத் தான் அதிகபட்சமாக ரூ. 17 கோடி கொடுத்துள்ளார். புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மொத்தம் 25 வீரர்கள் இடம்பிடித்துள்ளார். இந்த அணியின் மொத்த சேமிப்பு 65 லட்சம் ஆகும். கேன் வில்லியம்சன் இந்த அணியை வழிநடுத்துகிறார். அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட டேவிட் வார்னர் (ரூ. 12.5 கோடி) ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் விளையாட முடியவில்லை. இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என இரு அணிகளும் ஒரே மாதிரியாக 25 வீரர்களை எடுத்து சுமார் 65 லட்சத்தைச் சேமித்துள்ளனர். அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தான் அதிகபட்சமான தொகை ரூ.15 கோடி கொடுத்து ஏலம் எடுத்துள்ளனர். புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
டெல்லி டேர்டெவில்ஸ்
டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் 25 வீரர்கள் இடம் பிடித்துள்ளார். இந்த அணி மொத்தம் ரூ.1.60 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. முதலில் கவுதம் கம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டார், போட்டிகளின் பிற்பகுதியில் அவர் விலகிக்கொள்ள அவருக்குப் பதில் ஸ்ரேயஸ் ஐயர் கேப்டன் ஆனார். அதிகத் தொகை வாங்கப்பட்ட வீரர் ரிஷாபத் பந்த் (ரூ.15 கோடி). புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மொத்தம் 23 வீரர்கள் ஏலம் எடுத்து உள்ளனர். இந்த அணிக்கு மொத்த சேமிப்பு ரூ.1.65 கோடி. அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் (ரூ. 12.5 கோடி) விளையாடாத காரணத்தினால் அவரின் இடத்தில் ரஹானே கேப்டனாக இந்த அணியின் கேப்டனானர்.புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் .
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 25 வீரர்களை எடுத்துள்ளது. இந்த அணியின் மொத்த சேமிப்புத் தொகை ரூ.6.50 கோடி. அணியின் கேப்டன் டோனி (ரூ.15 கோடி) அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுளார். குறைந்த தொகை ஏலம் எடுக்கப்பட்ட அணி தற்போது வரை நடந்த போட்டியின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் அனைத்தும் மே 10, 2018 வரை நடந்த ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications