இந்திய இண்டர்நெட் நிறுவனங்கள் மத்தியில் நடந்த மிகப்பெரிய நிறுவன கைப்பற்றல் திட்டமாகப் பிளிப்கார்ட் - வால்மார்ட் உள்ளது. பிளிப்கார்டில் சுமார் 16 பில்லியன் டாலருக்கு 77 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது வால்மார்ட்.
ஆனால் தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் மற்றொரு முதலீட்டாளரான ஜப்பான் சாப்ட்பேங்க் தனது பங்குகளைவிற்பனை செய்ய வேண்டாம் எனத் திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் சாப்ட்பேங்க்
இந்திய இண்டர்நெட் நிறுவனங்களின் அதிரடி வளர்ச்சியில் ஈர்க்கப்பட்ட ஜப்பான் சாப்ட்பேங்க், இந்தியாவில் பல்வேறுநிறுவனங்களில் முதலீடு செய்யது, இதில் முக்கியமானது பிளிப்கார்ட்.
முதலீடு..
சாப்ட்பேங்க் நிறுவனத்தின் முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் விஷன் பண்ட் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தில்முதலீடு செய்து சுமார் 21 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.
ஒரு வருடம்
சாப்ட்பேங்க் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து ஒரு வருடம் கூட முழுமையாக ஆகாத நிலையில், பங்குகளைவால்மார்டுக்கு விற்பனை செய்தால் அதற்குச் சாப்ட்பேங்க் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும்.
இதன் காரணமாகச் சாப்ட்பேங்க் தற்போது தன் கையில் இருக்கும் 21 சதவீத பங்குகளை விற்பனை செய்ய வேண்டாம்என முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
வளர்ச்சி
புதன்கிழமை வால்மார்ட் பிளிப்கார்ட் ஒப்பந்தத்தில் இந்நிறுவனம் சுமார் 22 பில்லியன் டாலர் வரையில் மதிப்பிடப்பட்டநிலையில், பிளிப்கார்ட் இனி வரும் நாட்களில் அதிகளவில் வளரவும் வாய்ப்புகள் உள்ளது எனச் சாப்ட்பேங்க்யோசிக்கிறது.
எனவே பங்குகள் விற்பனை குறித்துப் பிளிப்கார்ட் இன்னும் 10 நாட்களில் தனது முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.
முதலீடு லாபம்
பிளிப்கார்டில் ஆகஸ்ட் 2017ஆம் ஆண்டுச் சாப்ட்பேங்க் 2.5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்தது தற்போதுவால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் சுமார் 4 பில்லியன் டாலர் அளவிலான தொகை பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு இருப்பு
பிளிப்கார்டின் பங்குகள் சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் 21 சதவீதம் இருப்பது போல, இந்நிறுவனத்தின் இணைநிறுவனரான பின்னி பன்சாலிடம் 4-5 சதவீத பங்குகள் உள்ளது. இதைத் தொடர்ந்து டைகர் குளோபல் 5%, டென்சென்ட் 6%, மைக்ரோசாப்ட் 1%, மேலும் இந்நிறுவன ஊழியர்களிடம் கணிசமான பங்கு இருப்பு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications